8 மாடி ஓட்டல் சீல் வைக்கப்பட்டது – மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி

0 26

IMG_9461 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் நகர பகுதியில் குறிபிட்ட உயரத்தை விட அதிகமான உயரங்களில் கட்டிடங்கள் கட்ட கூடாது என்று என்பதை மாநகராட்சி நிர்வாகத்தினர் வரையரை செய்து வைத்துள்ளனர். இந்த சட்டத்தை மீறி கட்டுவதும் பல தொழிலதிபர்களின் வழக்கமாக தான் உள்ளது. இதற்க்கு மாநகராட்சி அதிகாரிகள் கணிசமான தொகையை பெற்று கொண்டு காட்டு இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிடுவார்கள். இது ஒருபுறம் இருக்க
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்ட துவங்கப்பட்ட ஒரு கட்டிடம் 2011ஆம் ஆண்டு வரை கட்டி பாதியில் விடப்பட்டு கிடந்தது. இந்த இடம் 5 பேரின் கைகளை தாண்டி 6வதாக இந்த இடத்தை வாங்கியவர் தான் பக்ரூதீன். மொத்தம் 47,500 சதுர அடி கொண்ட இடத்தில் 21ஆயிரம் சதுர அடி முறைகேடாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்கள் கட்டுமான பணியில் கிடந்த இந்த கட்டிடம் தீடீரென அப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டி.10 என்ற 3நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் நட்சத்திர ஓட்டலாக பொலிவுடன் காணப்பட்டது.

IMG_9459தற்போது ஓட்டலுக்கு வந்த பிரச்சனை குறித்து விசாரிக்கையில் இந்த ஓட்டல் கடந்த 2009ல் துவங்கி கட்டப்பட்டு கொண்டிருக்கும் போதே 2102ஆம் ஆண்டிற்க்குள பலரது கைகளுக்கு மாறியது பின்னர் ஒருவர் இதனை வாங்கி தொடர்ந்து கட்டுமான பணியினை தொடர்ந்து நிலையில் மாநகராட்சி திட்ட குழு உறுப்பினர் குழுவில் இருந்து ஓட்டலுக்கு 2012ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதில் விதிமுறையை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதால் கட்டுமான பணியினை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓட்டல் நிர்வாக இயக்குநர் பக்ரூதீன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது 3ஆண்டுகள் கடந்து 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்ததில் மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவு செல்லும் என்றும், விதிமுறையை மீறி பல அடுக்கு மாடி கட்டியுள்ளது உறுதிபடுத்தப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதுக்குறித்த நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்திற்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

IMG_9461அந்த நோட்டீஸ் மீது மீண்டும் தடுப்பானை பெற முயற்சி செய்த நிலையில் இன்று மாநகராட்சி திட்டகுழு உறுப்பினர் நாகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் வரம்பை மீறி கட்டப்பட்டிருந்த 5 முதல் 8 அடுக்குவரையிலான கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தரை தளத்தில் உள்ள காலியான இடத்தை வாகன நிறுத்திற்காக பயன்படுத்தியதால் தரைதள ஓட்டலையும் மூட முயற்சி செய்துள்ளனர். ஆனால் நிர்வாகம் சார்பில் அதற்;க்கு தடை ஆணை பெறப்பட்டதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசிய நாகேஸ்வரன் முறையாக நிர்வாகத்திற்க்கு தகவல் கொடுத்தும் அவர்கள் தடை ஆணை பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். மாநகராட்சியில் உள்ள சட்டப்படி நகர பகுதிகளில் எழுப்பபடும் கட்டிடங்கள் 4 மாடிகளுக்கு மேல் எழுப்ப கூடாது என்றும். அதனை தாண்டி எந்த கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த கட்டிடத்தில் நான்கு அடுக்களை தவிற மற்ற மேல் அடுக்குகளை சீல் வைத்துள்ளதாகவும் கூறினார்.
இதுஒருபுறம் இருக்கையில் திருச்சி நகர பகுதியில் பல கட்டிடங்கள் 4 அடுக்குகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. அதனை இந்த மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைப்பார்களா இல்லையா என்பது தெரியவில்லை. குறிப்பாக நீதிமன்றத்திற்க்கு எதிரே உள்ள கட்டிடம் பலஅடுக்குகளை கொண்டது அதனை பூட்டி சீல் வைக்க எந்த அதிகாரியும் வரவில்லை. இங்குள்ள பல மருத்துவமனைகள் 5 அடுக்குகளுக்கு மேல் கட்டி வைத்துள்ளனர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வரவில்லை. இப்படி பல கட்டிடங்கள் வரம்பை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு இந்த கட்டிடத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது? ஒருவேலை நிர்வாகத்தின் பேச்சு வார்த்தையில் கட்டுபடியாகவில்லையா? அல்லது மாதம் தோறும் வர வேண்டியது வந்து சேரவில்லையா என்பது பெரிய கேள்விகுறி தான்? இவை அனைத்தையும் உங்களுடைய சிந்தனைகளுக்கே விட்டுவிடுகிறேன்

Leave A Reply

Your email address will not be published.