காவு வாங்கிய பழைய வீடு – மாநகராட்சியின் அலட்சியம்

0 26

DSC_0255திருச்சி ஸ்ரீரங்கம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பெருமாள் தான் ஸ்ரீரங்கத்தை புண்ணியஸ்தலமாக மாற்றிய பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிகை அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் பணம் செலுத்தி தரிசிக்க வரும் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு மட்டும் பெருமாள் பல உடைகள், ஆபரணங்கள் என்று பல வடிவங்களில் அருகில் வந்து அருள் பாலித்து வருகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஸ்ரீரங்கம் என்றாலே கோவிலை சுற்றி உள்ள நடுவீதி, உத்தரவீதி, சித்திரைவீதி, என்று பல வீதிகளிலும் அவாதான் மெஜாரிட்டி நாம் நடந்து செல்லும் போது வீடுகளின் அமைப்பை பார்த்தாலே தெரிந்துவிடும் இது அவா வீடு தான் என்று அப்படிபட்ட பழைமையான வடிவமைப்புடன் இன்றும் தாங்கி நிற்கிறது பல வீடுகள்.

DSC_0242இப்படிபட்ட நிலையில் தான் திருச்சி மேல உத்திர வீதியில் ரங்காராவ் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. அடித்தளம் போடபட்ட நிலையில் முதல்கட்டமாக கட்டிடத்தை தாங்கி நிற்க தரையில் பெல்ட் எனப்படும் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் இரண்டு பகுதிகளிலும் 100 ஆண்டுகளை கடந்த பழமையான வீடுகள் உள்ளது. இரண்டு வீடுகளின் நடுவின் தற்போது புதிதாக கட்டிடங்கள் எழுப்பபட்டு வரும் நிலையில், இப்பணியில் பொறியாளர் ரங்கராஜன் மேற்பார்வையில் ஆண்கள், பெண்கள் என்று 16 பேர் ஈடுபட்டு வந்தனர். பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே புதிய கட்டிடத்தின் வலது புறத்தில் உள்ள சம்பத் என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்துள்ளது. அந்த வீட்டை ஒட்டி பணியாற்றி கொண்டிருந்த 11 பேர் அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர். இந்த விபத்தில் தென்னுரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரங்கநாதன், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ரமேஷ், குருவம்பட்டியை சேர்ந்த கோபி, குருவம்பட்டியை சேர்ந்த லட்சுமணன், உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் தண்டபானி, சரவணன், சக்திவேல், நீலமேகம் உள்ளிட்ட பலர் பலத்த காங்களுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

DSC_0263இச்சம்பவம் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சம்பத் என்பவருடைய வீடு 100 வருடங்களை கடந்து வந்துள்ள நிலையில் மிகவும் பழையான இந்த வீட்டின் அருகில் இயந்திரங்களின் அதிர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டிட உரிமையாளர் மீதும், கட்டிட பொறியாளர், மேற்பார்வையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடுகளின் நிலை பற்றி இதுவரை கணக்கெடுக்காமல், வீடுகளின் தன்மை பற்றி அறிந்து கௌ;ளாமல் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர். தற்போது அனுமதி வழங்கிய அதிகாரி மேல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஸ்ரீரங்கத்தில் உள்ள 1700க்கும் மேற்பட்ட வீடுகள் 100 ஆண்டுகளை கடந்து இன்றும் நிற்பது அன்றைய பொறியாளர்களின் நேர்மையும், திறமையையும், உழைப்பையும், இன்றும் நினைவு கூற முடிகிறது. இப்போது உள்ள கட்டுமான பொறியாளர்களை சொல்லவே வேண்டாம்.

DSC_5706 நாம் கட்டுமான பொறியாளர்களை குறை கூறுவதைவிட கட்டிடம் கட்டுவதற்க்கும், மின் இணைப்பு பெறுவதற்க்கும், குடிநீர் இணைப்பு பெறுவதற்க்கும், இடத்தை அளவிடும் நில அளவையர் என்று தெய்வங்களி தொடங்கி ,உப தெய்வங்கள் வரை அனைவருக்கும் காந்தியை காட்ட வேண்டும் இல்வைல என்றால் ஒரு நாளில் நடைபெறும் வேலையை 1 மாதத்திற்க்கு நகர்த்தும் திறமைசாலிகள் போல செயல்படுவார்கள். எனவே கட்டுமான பொறியாளர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் வேலை சீக்கிரம் நடைபெறும் எனவே எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டிய நிலை உள்ளது. இங்கு நம்முடைய கேள்வி ஸ்ரீரங்கத்தில் உள்ள பழமையான வீடுகளை மாநகராட்சி ஏன் கணக்கெடுக்கவில்லை? கட்டிடங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ளமால் எப்படி புதிய கட்டிடத்திற்க்கு அனுமதி வழங்கியுள்ளனர்? அனுமதி வழங்கிய அதிகாரி மேல் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த மாநகராட்சியும், காவல்துறையும் பதில் கூறுமா என்பதை சற்று பொருத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.