நிவாரண பணிக்கு சென்றவர்களை பாதியில் கழட்டிவிட்ட இலக்கு அமைப்பு

0 9

12295265_664004843702203_3972273981190182205_nதமிழக்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் இன்றும் அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வெள்ளம் ஏழை, பணக்காரன் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்தி ஒரு வேளை உணவிற்காக அனைவரையும் கையேந்த விட்டுவிட்டது. இதையும் நாம் ஏற்றுகொண்டு அதனை சமாளிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படி பாதிக்கப்பட்டு கிடந்த மக்களுக்கு இரவு பகல் பாராமல் பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், நல்ல உள்ளங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுடைய உறவுகள் பாதிக்கப்பட்டதை போல் அறிந்து தன்னால் முடிந்த பல உதவிகளை பொருளாகவும், பணமாகவும் கொடுத்து உதவினார்கள், உதவி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

12313920_664004433702244_3617992991827242459_nஅவர்களுக்கு மத்தியில் ஒருசில சிலர் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இழிவான செயல்பாடுகளில் ஈடுபட்டது நம்முடைய காதில் விழும்போது சற்று கடினமான மனதுடன் அதை கேட்க வேண்டியுள்ளது.

நிவாரணத்திற்காக பெறப்பட்ட பொருள்களை தங்களுடைய சுய லாபத்திற்க்கு விற்பனை செய்துள்ள அவலமும் இங்கு அரங்கேரியுள்ளது. இது ஒருபுறம் இருக்க நம்மிடம் பேசிய நண்பர் ஒருவர் நிவாரணம் குறித்து பேசுகையில் அவர் முகத்தில் அப்பபட்ட கோபத்தையும், எரிச்சலையும் காண முடிந்தது.

இதுக்குறித்து விவரித்த அவர் உங்களுக்கு இலக்கு அமைப்பை பற்றி தெரியுமா? அவர்கள் நிவாரண பொருட்கள் கொடுக்க சென்ற இடத்தில் எங்களை பாதியிலேயே கழட்டிவிட்டதாகவும், திரும்பி ஊருக்கு வந்து சேர பணம் இல்லாமல் எங்களிடம் இருந்த பணத்தை வைத்து நாங்கள் திரும்பி வந்தோம் என்று தலையில் அடித்து கொண்டு கூறினார்.

12316213_664004820368872_7798293278745403842_nதொடர்ந்து அவரது அனுபவங்கள் குறித்து இங்கு விவரிக்கிறார் அந்த நண்பர் திருச்சியில் உள்ள இலக்கு என்ற அமைப்பும், தண்ணீர் என்ற அமைப்பும், ஷைன் திருச்சி என்ற அமைப்பும் இணைந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

முதலில் சையது முதுர்ஷா பள்ளியில் இடம் கேட்டு பொருட்களை சேமித்த குழு அதிகளவில் பொரட்கள் சேர துவங்கியதால் பொருட்கள் போதும் என்று அங்குள்ள கரும்பலகையில் எழுதி போட்டுள்ளது.

அது அன்று பெய்த மழையில் அழிந்து போனதால் பொருட்கள் வழங்குபவர்கள் அதனை கவனிக்காமல் பொருட்களை கொடுக்க வந்ததால் ஷைன் திருச்சியின் அமைப்பை சேர்ந்த இம்ரான் என்பவர் ஜேம்ஸ் பள்ளியில் இடம் கேட்டு அங்கு பொருட்களை சேமிக்க துவங்கினார்கள்.

12347667_664004570368897_3531545648125938242_nஇதற்கிடையில் ஒருசிலர் பணமாகவே கொடுக்க முன் வந்ததால் இலக்கு அமைப்பை சேர்ந்த உமர் என்பவருடைய வங்கி எண்ணை கொடுத்து இதில் நேரடியாக செலுத்தம்படி அறிவுறுத்தியுள்ளார்.

இப்படி பொருட்களும், பணமாகவும் சேர்ந்தவுடன் அனைத்து பொருட்களுடன் கிளம்பிய குழுவில் இலக்கு அமைப்பில் இருந்து உமர், தண்ணீர் அமைப்பில் இருந்து ஒருவரும், ஷைன் திருச்சி அமைப்பில் இருந்து 10 பேரும், ஒருசில சமூக ஆர்வலர்கள் 5 பேரும் நிவாரண பொருட்களை வழங்க சென்றுள்ளனர். இரண்டு லாரிகளில் புறப்பட்ட பொருட்கள் ஒன்று கடலூக்கும், மற்றொன்று சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

10687096_518644084904947_1190828568420310565_nபொருட்களை கொண்டு செல்லும் குழுக்கள் தனியாக ஒரு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சென்னையை நெருங்கும் போதே பொருட்களை ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பாதி பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள பொருட்களை தான் பாதிக்கபட்டவர்களுக்கு கொடுத்துவிடுவதாக உமர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தண்ணீர் அமைப்பை சேர்ந்த வினோத் திருவண்ணாமலையில் இருந்து காரில் வந்து லாரிக்கு முன்னால் நின்று போட்டோவிற்க்கு போஸ் கொடுத்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றவுடன், நிவாரண பணிக்காக சென்றவர்களை பாதியில் திரும்பிபோக உமர் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அனைவரும் சென்ற வேன் ஓட்டுநர் போதையில் மட்டை ஆனதால் அவர்கள் யாரும் வேனில் திரும்பிவர தயாராக இல்லை. இதற்கிடையில் அங்கு நிவாரண பணிகாக சென்றவர்களிடம திரும்பி வர கையில் பணம் இல்லாமல் மொத்தம் 12 பேர் திருச்சிக்கு திரும்பி வர திணறியுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் வைத்திருந்த 100, 200களை திரட்டி 2ஆயிரம் ரூபாயில் 12 பேர் திருச்சிக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் ஏறியவர்கள் பேருந்து நடத்துனரிடம் தங்களிடம் 2ஆயிரம் மட்டுமே உள்ளதாக கூறியதால் பேருந்து நடத்துனர் ஸ்டேஜ் மாற்றி அவர்களுக்கான கட்டணத்தில் 170 ரூபாய் மீதம் கொடுத்துள்ளார்.

திருச்சிக்கு வந்தடைந்த அனைவரும் மத்திய பேருந்து நிலையத்தில் டீயை குடித்துவிட்டு பேருந்தில் வீட்டிற்க்கு செல்ல ஆளுக்கு பத்து ரூபாய் பிரித்து எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இலக்குக்கு வந்த நிவாரண தொகை எவ்வளவு? அது என்ன ஆனது?

சேகரிக்கப்பட் பொருட்கள் முழுமையாக பாதிக்கபட்டவர்களுக்கு சென்றடைந்ததா என்பது ஒரு கேள்விகுறி?

ஆனால் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண பணிக்கு சென்ற நல்ல உள்ளங்கள் தான் என்று கூறினால் அது மறுக்க முடியாது.

யாருக்கு தெரியும் இப்படி நடு ஆத்தில் கழட்டி விடுவார்கள் என்று.

Leave A Reply

Your email address will not be published.