ஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி

0 22

jallikattu3தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினர். உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலமடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய அண்ணாத்துரை என்பவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.