தொழிற்சாலைகளை மாசுபாடுத்தினால் கடும் நடவெடிக்கை – அரசு எச்சரிக்கை

0 20

250px-AlfedPalmersmokestacks சீனாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் சீன அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கட்டுப்படுத்த அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. 47
விதிமுறை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்களும் புகார் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புகை, கழிவுநீர் உள்ளிட்டவற்றை முறையாக வெளியேற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விதிமுறைமீறி செயல்பட்ட சுமார் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. 28,600 தொழிற்சாலைகள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.