அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பம் அபேஸ் செய்த குவாரிகள்- கண்துடைப்பு சோதனை

0 2

Vijayabasker_kuvariபுதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சில குவாரிகள் பட்டா இடங்களிலும், பல குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அன்னவாசல், நார்த்தாமலை, அம்மாசத்திரம், தொடையூர், இலுப்பூர் ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.கடந்த திமுக ஆட்சியின் போது இவ்வாறு அரசு புறம்போக்கு நிலங்களில் கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்குவதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் சரியான முறையில் எடுக்கப்படவில்லை. இதை சாதகமாக்கிக் கொண்ட கல்குவாரி உரிமையாளர்கள் பலர், அதிகாரிகளை சரிக்கட்டி கல்குவாரிகளை இயக்கத் துவங்கினர். அத்துடன் வெடி வைத்து அரசு அனுமதித்த அளவைவிட இஷ்டம்போல் விலை உயர்ந்த கற்களை வெட்டி எடுத்து வந்ததனர்.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதோடு, கிரானைட் குவாரிகளைச் சுற்றி வசித்து வரும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் அளித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, வருவாய்த் துறையிருடன் இணைந்து கனிம வளத் துறையினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிரானைட் கல்குவாரிகளில் தற்போது தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பூதாகரமாக நடந்து வருகிறது. இக்கனிமவளங்களை மாவட்டத்தின் மிக முக்கியப் புள்ளிகள் ராட்சத இயந்திரங்கள் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர். கனிமங்களை வெட்டி எடுப்பதில் விதிமுறைகளை மீறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுவிஷயத்தில் கண்டும், காணாமல் கனிமவள முறைகேட்டில் ஈடுபடுவோரை பாதுகாத்து வந்தவர்கள், தற்போது வெறும் கண்துடைப்புக்காக இதுபோன்ற நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.

இம்மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிரானைட் மற்றும் கல் குவாரிகள் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள் கைவசத்தில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். அதையும் மீறி துணிவுடன் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் அதிகாரிகளை ஆளும்கட்சி பிரமுகர்கள் உதவியுடன் இடமாறுதல் செய்து விடுகின்றனர்.

மதுரை கிரானைட் குவாரிகளில் முறைகேடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆய்வு செய்து பல முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளார். இதுபோல் மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிகாரிகளை நியமித்து புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தாமல் மக்கள் மீது அக்கறையுடன் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.