முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்ன விஜயகாந்த்-கலவர பூமியானது டெல்டா

0 2

vijayakanthவெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.  டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார். மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொண்டு வந்ததனால் ஜெயலலிதாவை காவிரித்தாய் என்று சொல்கிறார்கள். சென்னை வெள்ளத்திற்கு காரணமாக இருந்ததனால் அவரை ‘கூவத்தாய்’ அல்லது ‘வெள்ளத்தாய்’ என்று அழைக்கலாமா?

நீங்கள் எனக்குகூட ஓட்டுப்போட வேண்டாம். உங்களுக்கு யார் நல்லவர்களாக தெரிகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப்போடுங்கள். ஜெயலலிதா உங்களுக்குத்தான் அம்மா. எனக்கு அவர் ஜெயலலிதாதான். மக்களுக்காக எந்த தமிழக அமைச்சரும் செயல்படவில்லை. ஊடக துறையினர் இது குறித்து பேச மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஆளும் அமுதிக கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்கள் “என்றவர் எதிரே உள்ள நிழற்குடையில் இருந்த தனது பேனர் கீழே இறங்கி ஜெ. படம் தெரிகிறது. அதைப் பார்த்தால் கோபம் வருகிறது என்று சொல்ல ..

அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் ஜெ. படத்தை அற்ற முயன்றபோது படம் கீழே விழுந்து உடைந்தது. அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துகொண்டு வேனில் வீடு திரும்பிய தேமுதிக வினரை கும்பகோனத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓடஓட விரட்டித்தாக்கியுள்ளனர்.

 கொல்லுமாங்குடியை சேர்ந்த தேமுதிக வினர் தஞ்சையிலிருந்து வீடுதிரும்பினர். சாப்பிடு வதற்காக கும்பகோனம் உச்சிப்பில்லையார் கோயில் அருகே வேனை நிருத்திவிட்டு இறங்கினர். இதைப்பார்த்த அதிமுக நகர நிர்வாகி ஒருவர் அனைவருக்கும் தகவல் கொடுத்த நிமிடமே 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேனை சுற்றி வளைத்து தாக்கத் துவங்கினர். இதைப் பார்த்த தேமுதிகவினர் தப்பித்தால் போதுமென தலைதெரிக்க ஆளுக்கொரு திசைக்கு ஓடினர்.
தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார் ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று விஜயகாந்த் பத்திரிகையாளர்களை பார்த்து தூ என சொன்னது தமிழகம் முழுக்க அவருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தஞ்சையில் நடந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.