விஜயகாந்தை விரட்டும் பிஜேபி-திடீர் சந்திப்பு

0 2

Vijayakanth with muralitharravo

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு முரளிதர் ராவ், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

முன்னதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.கடந்த வாரம் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த மக்கள் நலக் கூட்டணியினர், தங்களது கூட்டணியில் இணையுமாறு அவரை வலியுறுத்தினர். அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை அழைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதேபோல், கூட்டணி பேச்சுவார்த்தையும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி என கூறி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்தும், புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் இதுவரை வாய் திறக்காமல் உள்ளார். அதே சமயம் விஜயகாந்த் தங்களது கூட்டணியில்தான் உள்ளார் என பா.ஜனதா கூறி வருகிறது. ஆனால் விஜயகாந்தோ, “பிஜேபிதான் அப்படி கூறிக்கொண்டுள்ளனர். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கிய பிறகுதான் முடிவெடுக்கப்படும். யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியினரின் கருத்தை கேட்டு முடிவெடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த்தை சந்தித்து பேசிய, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்றும் அவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, கூட்டணி குறித்து அவரிடம் விவாதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை விஜயகாந்த்தை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பு. கொடுத்துள்ளது.. .

இந்த சந்திப்பின்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட விஜயகாந்துக்கு முரளிதரராவ் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டதாகவும், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் முன்வைக்கும் கோரிக்கைதான் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துகொள்வோம்’ என பா.ஜனதா தரப்பில் சொல்லப்படுவதாகவும், ஆனால் அதனை ஏற்கும் மனநிலையில் விஜயகாந்த் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கூட்டணி குறித்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருக்குமாறு விஜயகாந்தை பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களை கைப்பற்றியது.

விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.