சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் நடிகர் சங்கம் எச்சரிக்கை

0 3

sarath-vishal-11சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் சங்க கணக்கு வழக்குகளை திருப்பி ஒப்படைக்கும் விவகாரத்தில் சரத்குமார் பொய்யான தகவலை பரப்பி வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் சங்கம்  வெளியிடப்பட்ட அறிக்கையில், நடிகர் சங்க அறக்கட்டளைக்கு இரண்டரை வருட கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டியுள்ளது.

கணக்குகளை ஒப்படைத்த 21 நாட்களில் நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்ட நடிகர் சங்கம் தயாராகி வருகிறது.

சரத்குமார் பொறுப்பற்ற செயலால், நடிகர் சங்கம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. உறுப்பினர் மற்றும் சங்க நலனுக்காக சரத்குமார் மற்றும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் என நடிகர் சங்கம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.