பத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது

0 18

ca0b1c46-fc13-4d69-8b33-9598f95670f7OtherImageசென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதாக  பார்த்த சாரதி எம்.எல்.ஏ உள்பட 18 தேமுதிகவினர் கைது செய்யபட்டு உள்ளனர்.மேலும் பலர் மீது  வழக்குபதிவு செய்யபட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பத்திரிகையாளர்களின் வீடு புகுந்து தாக்கப் போவதாகவும் ஏற்கனவே மிரட்டியவர் பார்த்தசாரதி என்பது குறிப்பிட தக்கது.

Leave A Reply

Your email address will not be published.