ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் அதிமுக- பொதுக்குழுவில் தீர்மானம்

0 3

jaya_2667872fதமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் சென்னை வர உள்ளனர். அவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு 2 மாதமே அவகாசம் இருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் தீவிரமாகி வருகின்றன. இந்த தடவை மூன்று அல்லது நான்கு முனை போட்டி ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்நிலையில், தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.jayalalitha

மேலும், சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்குவது, மழை வெள்ள பாதிப்பின்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, மீனவர் பிரச்சனைக்கு வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.