எலிக்கு பயந்த ஏர் இந்தியா விமானம்

0 3

12-1434101237-air-india-dreamliner-600-jpgபறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் எலி ஒன்றைக் கண்டதாக பயணி ஒருவர் கூறிதை அடுத்து, அந்த விமானம் பயணத்தின் இடைநடுவில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.

லண்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமே மீண்டும் மும்பைக்கே திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த விமானத்தில் எலி இருப்பதை தங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்ளோடு விமானங்களுக்குள் நுழையக்கூடிய எலிகள், அங்குள்ள வயர்களை கடித்துவிட்டால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.