என்னாச்சு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு ! – கோல்மால் விசாரணை

0 15

dsp_vishnu_priyaயாரும் மறந்துவிடவில்லை அந்தக் கொடூர நிகழ்வை. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை  அறிக்கையை 20-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ,.டி. டீம். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்த நிலையில் சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்கும் முயற்சிகளும் விறுவிறுப்பாக அரங்கேறியிருக்கின்றன.

செப்டம்பர் 18-ஆம் தேதி தனது கேம்ப் ஆபிஸில் திருசெங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் களமிறங்கிய நாம், நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார் கொடுத்துவந்த டார்ச்சர்களே இதற்குக் காரணம் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு அவ்வப்போது அம்பலப்படுத்தியது. இருந்தும் எஸ்பி.யை காப்பாற்றவே விசாரணையை பல திசைகளிலும் இழுத்தடித்து வந்தது காவல்துறை. இதற்காக கோகுராஜ் கொலை வழக்கையும் யுவராஜ் சரண்டர் விவகாரத்தையும் விஷ்ணுப்பிரியா விவகாரத்தோடு கலந்தடித்துக் குழப்பிவந்தனர்.

இந்த வழக்கில் கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி தொடங்கி  டி.எஸ்.பி.க்கள் திருக்கோவிலூர் கீதா, அரவக்குறிச்சி கீதாஞ்சலி, சங்ககிரி ஜரீனாபேகம், ஜெயங்கொண்டம் இனிகோ, சேலம் உதவிக் கமிஷனர் விஜய கார்த்திக்  மற்றும் வழக்கறிஞர் மாளவிகா, திருக்கோட்டியூர் குருக்கள், விஷ்ணுபிரியாவின் பெற்றோர் என ஏறத்தாழ 50 சாட்சிகளை விசாரித்தபோதும், பெரும்பாலான வாக்குமூலங்கள் எஸ்.பி.செந்தில்குமாருக்கு எதிராகவே இருந்துள்ளன.

குறிப்பாக, தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுப்பிரியாவிற்கும், தனக்கும் நடந்த  24 நிமிடங்கள் கொண்ட செல்போன் உரையாடலையும் வாட்ஸ் அப் உரையாடல் பதிவையும் அழுத்தமான வாக்குமூலத்தோடு டி.எஸ்.பி. மகேஸ்வரி சமர்ப்பித்தார். மேலும் இறப்பதற்கு முன் ஒரு வீடியோவை பதிவுசெய்து அதை ஏட்டு கௌரிசங்கரிடம் விஷ்ணுபிரியா கொடுத்ததாகவும் மகேஸ்வரி தெரிவித்தார். இதனால் ஏட்டு கௌரிசங்கரை தொடர்புக்கொண்ட சில போலீஸார், அவரிடமிருந்த வீடியோ பதிவையும் பென்டிரைவையும் கைப்பற்ற முனைந்தும் அது நடக்கவில்லை. விசாரணையின் போக்கு சரியில்லாத பட்சத்தில் அந்த வீடியோ பதிவு, பேசத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதேபோல் விசாரணையின்போது டி.எஸ்.பி ஜரீனாபேகம், “”எஸ்.பி.செந்தில்குமார் அவளைத் திட்டிக்கிட்டே இருப்பாராம். இதை என்னிடம் பல தடவை சொல்லி விஷ்ணுபிரியா அழுதிருக்கா. இவரால் இரவில் தன் கேம்ப் ஆபிஸில் தங்க பயந்துகொண்டு சங்ககிரியிலுள்ள என்னுடைய கேம்ப் ஆபிஸிற்கு வந்துவிடுவாள்”’ என்றதோடு…

“”பள்ளிப்பாளையத்திலே ரெய்டு போன விஷ்ணுபிரியா 3000 போலி மதுப்பாட்டில்களை பிடிச்சிருக்கா. அப்ப அவ லைனுக்கு வந்த எஸ்.பி.  5 பாட்டிலை மட்டும் பிடிச்சதா காட்டச்சொன்னார். மீதமுள்ள பாட்டில்களை விஷ்ணுபிரியா டீம் நொறுக்கிடிச்சி. அப்ப வந்த எஸ்.பி., “சோத்து மூட்டை.!  சோத்து மூட்டை… யாரைக் கேட்டு பாட்டிலை உடைச்சே’ன்னு அவளை அடிக்கக் கையை ஓங்கியிருக்கார்”’என்று ஒரு அதிர்ச்சிச் சம்பவத்தையும் ஆதாரமாகக் கூறியுள்ளாராம்.

இப்படி வாக்குமூலங்களில் பலரும் எஸ்.பி.செந்தில்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்திருப்பதால், எஸ்.பி.யைத் தப்பவைக்கத் துடிக்கும் உயர்’போலீஸ் அதிகாரிகள், பிறழ் சாட்சிகளை உருவாக்கும் நோக்கில், சாட்சிகளிடம் மீண்டும் மீண்டும் விசாரணை  நடத்தியிருக்கிறார்கள்.

21-ஆம் தேதி  மாலை, சாட்சிகளான விஷ்ணுபிரியாவின் டிரைவர் கௌரிசங்கரையும், திருசெங்கோடு எஸ்.ஐ.சந்திர கலாவையும்  டி.எஸ்.பி.ராஜன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. டீம் மீண்டும் விசாரித்தது. அப்போது சந்திரகலாவிடம், ’”நீங்கதான் விஷ்ணுபிரியாவை எஸ்.பி. டார்ச்சர் செய்ததாக கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் சொன்னீர்களா?’’என்று கேட்டனர்.

எஸ்.ஐ.சந்திரகலாவோ கொஞ்சமும் தயங்காமல் “”மகேஸ்வரி மேடம் டி.எஸ்.பி.யா இருக்காங்க. அதனால் அவங்க கேட்ட தகவலை நான் கொடுத்தாக னும்” என்றார் அழுத்தமாக. இந்த விசாரணையின்போது மிரட்டலும் பிரயோகப் படுத்தப்பட்டதாக காவல்துறையிலேயே பேச்சு அடிபடுகிறது. இது குறித்து காவல் துறை தலைமைக்கு தகவல் போக… “”விசாரணையை சரியா கொண்டு போங்க” என்று உத்தரவிட்டிருக்கிறார் ஏ.டி.ஜி.பி..

திருச்சியின் நுண்ணறிவுபிரிவு ஏசி வெங்கட்ராமன் தனக்கு கீழ் உள்ள பெண் எஸ்.ஐ.யிடம் ஆபாசமாக பேசினார் என்று எஸ்.ஐ.யின் கணவர் கொடுத்த புகாருக்கு ஏசியை குளச்சல் பகுதிக்கு தூக்கியடித்தனர். ஆனால் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விவகாரத்தில் எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர் தான் சர்ச்சைகள் புகைந்து கொண்டே இருக்கும் சுழ்நிலையிலும் அவரை பணிமாற்றம் கூட செய்யாமல் இருப்பது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கின் வேகம் காவல்துறைக் குள்ளேயே அதிரடியைக் கிளப்பியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.