2020 கனவு மெய்பட மணிமண்டபம் வேண்டாம் – அறிவியல் ஆய்வு மையம் வேண்டும்

0 28

12193567_1640539166226161_6619518564943453858_nஇந்திய நாட்டின் தனி ஒருவன் என்ற பெருமைக்குரிய முதல் குடிமகன் இன்றுவரை நாம் யாரும் அவர் இறந்துவிட்டதாக கூட நினைத்து பார்க்க முடியவில்லை. காரணம் இன்னும் அவர் குடியரசு தலைவராக இருப்பது போன்ற உணர்வு, இன்னும் அவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார் என்ற உணர்வு இன்னும் நமக்குள் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் மறைந்தாலும் இவர் தலைவர் என்ற முன்னுரிமையை பெறுவதைவிட இவர் ஒரு வழிகாட்டி என்பது தான் இங்கு பலருடைய பாதையில்  ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க அடித்தளம். இப்படிபட்ட ஒரு சகாப்தம் மண்ணில் புதைந்துள்ளதே தவிர அவருடைய ஒவ்வொரு ஆராய்ச்சியும் இன்றும் எல்லை தாண்டி பேசி கொண்டே தான் இருக்கிறது.03 Homepage_img கடலோரத்தில் பிறந்த ஒரு புதிய புயல் கரையை கடந்து பல வருடங்கள் டெல்லியை நோக்கி சென்று அங்கிருந்து பல ஆராய்ச்சி புயலால் தாக்கி சற்று வலுவிலந்து 83 வயதில் அமைதியாக மறைந்தது. இப்படிபட்ட புதுமையாளருக்கு மத்திய அரசானது அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மணி மண்டபம் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் உள்ள மாரல் ஆராய்ச்சி அறக்கட்டளை முதல் முதலாக மத்திய அரசிற்க்கு ஒரு புதிய வேண்டுகோளை முன் வைத்துள்ளது. 02 Homepage_imgஅப்துல்கலாமின் கனவை இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இராமேஸ்வரத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்க்கு பதிலாக அவரின் கனவை மெய்படுத்த அவர் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் டாக்டர்.ஏ.பி.ஜே.இப்துல்கலாம் விஷன் 2020 என்கிற பெயரில் அறிவியல் ஆய்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவியல் ஆய்வு மைய கட்டிடத்தில்

முதலாவதாக ஆய்வரங்க நுழைவாயில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விஷன் 2020 இந்தியா வல்லரசு நுழைவு வாயில் என்ற பெயரில் அமைய வேண்டும்.

இரண்டாவாதாக அதில் 5 தளங்களை உள்ளிடக்கிய வட்ட வடிவில் இருக்க வேண்டும் அதில் எந்த தளத்தில் இருந்து பார்த்தாலும் அவர் விதைக்கப்பட்ட இடம் தெரிய வேண்டும்.

மூன்றாவதாக 2ஆயிரம் பேர் அமரக்கூடிய கருத்தரங்க கூடம் அமைக்க வேண்டும்.

நான்காவதாக ஒரு தளத்தில் கலாம் அவர்களின் விருப்பபடி நூலகம் அமைக்க வேண்டும்.

ஐந்தாவது ஒரு தளத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும்.

ஆறாவதாக ஒரு தளத்தில் நாட்டினுடைய தேச தலைவர்கள், அறிஞர்கள், நாட்டிற்காக உழைத்தவர்கள், தியாகிகளுடைய வரலாறுடன் கண்காட்சி அமைக்கபட வேண்டும்.
இவையனைத்தும் பசுமையான சுற்றுச்சூழலில் அமைய வேண்டும் உள்ளிட்ட தங்களுடைய வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.01 Homepage_img மாரல் ஆராய்ச்சி அரக்கட்டளை இதுக்குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழவதும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அம்மாநில முதலமைச்சர்களுக்கு இது தொடர்பான கடிதங்கள் அனுப்ப உள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க [email protected], www.fb.com/moralfoundation1 என்ற முகநூல் மற்றும் மின் அஞ்சலில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

கனவுகள் மெய்பட இருகரம் சேர்ப்போம்

Leave A Reply

Your email address will not be published.