உயிரைக் கொடுத்து பயணிகளின் உயிரைக் காப்பற்றிய ஓட்டுநர்

0 5

அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்ட பிறகும் சாதுர்யமாக ஓட்டி 80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் b86b7356-f513-4d51-b89d-82150a758df2கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர், அரசு பேருந்து ஓட்டுனராக இருந்தார். இவர், திருப்பதியில் இ
ருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.

அப்போது ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்தபோதும், சாதுர்யமாக பேருந்தை இயக்கி சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

இதையறிந்த பயணிகள் ஓட்டுனரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஓட்டுநர் சிவக்குமாரின் சாதுர்யத்தால் விபத்து ஏற்படாமல், 80 பயணிகள் உயிர்தப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.