நான் பைத்தியகாரனாகவே இருக்க ஆசைப்பட்டேன் ! ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம்.

0 44

a4நான் பைத்தியகாரனாகவே இருக்க ஆசைப்பட்டேன் !

மனம் திறந்த ஐ..எஸ். அதிகாரி . சகாயம்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒவ்வொருத்தரும் அடுத்த முதல்வர், வருங்கால முதல்வர், நாளைய முதல்வர், முதல்வர் வேட்பாளர் என்று பக்கம் முதல்வர் கனவோடு சுற்றிக்கொண்டுயிருக்கும் சுழலில் இன்றை தமிழக இளைஞர்கள் அமைப்பினர் சிலர் தமிழகத்தின் அடுத்த சி.எம். சகாயம் என்று ஊர்வலம், பேரணி, பொதுகூட்டம், என்று பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய மனநிலை என்ன என்பதை திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசிய பேச்சு மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எதையும் நோக்கி போகிறேன் என்பதை மனம் திறந்து பேசியதாக அமைந்தது அது அப்படியே

ஓவர் டூ சகாயம்

சுடுகாட்டில் நான் தங்க வேண்டும் என்று முடிவெடுத்தது அன்றைக்கு மாலையில் 5 மணிக்கு, மெழுவர்த்தி கூட எடுத்து செல்லவில்லை, அது திட்டமிட்ட நிகழ்வு இல்லை. அன்றைக்கு அம்மாவாசை என்பது கூட எனக்கு அடுத்த நாள் தான் தெரியும். அம்மாவாசை இரவு சுடுகாடு என்பது எல்லோருக்கும் கூடுதல் அச்சத்தை தரும். ஏனென்றால் நம்முடைய முன்னோர்களின் ஆவிகள் எல்லாம் அங்கே வரும் என்று நம்பிக்கை, என்னிடம் ஆவிகளை பற்றி பயம் உங்களுக்கு இல்லையா என்றெல்லாம் கேட்டார்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய பல கோர மனிதர்களின் முகங்களை பார்த்து பிறகு எனக்கு ஆவிகளை பற்றிய அச்சமே எனக்கு வரவே இல்லை.

மதுரை ஆட்சியராக நான் இருந்த போது நிறைய மக்கள்கள் நம்பிக்கையோடு நடவடிக்கை எடுப்பார் என்னிடம் மனுக்களை கொண்டு வருவார்கள், மிகப்பெரிய பிரச்சனை எது தெரியுமா, மக்களிடைத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, அதை காட்டிலும் மிகப்பிரச்சனை   அந்த நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது.

23 ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய பணியை தொடங்கிய போது நோ்மையாக இருந்த போது நோ்மையாக இருப்பவர்கள் தான் பைத்தியகாரர்கள் என்று சொல்வார்கள், நான் பைத்தியகாரன இருக்கவே ஆசைப்பட்டேன். காரணம் எனக்கு தெரியும். இந்த உலகத்தின் வரலாறுகள் பல பைத்தியகாரர்களால் எழுதப்பட்டது என்று எனக்கு தெரியும்.

மதுரையில் கோகிலாபுரம் என்கிற கிராமத்தில் மக்களை சந்திக்க சென்றேன், அங்கே, விவசாயிகள், தொழிலாளிகள், மகளிர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்தேன். இதில் குழந்தைகளையும் சந்தித்தேன். நான் நம்புவது குழந்தைகளை தான். 45 வயது தாண்டியவர்களை எல்லாம் நான் அதிகமாக நம்புவது கிடையாது. இளைஞர்களை நம்புகிறேன். அவர்கள் தான் இந்த தேசத்தின் மாற்று சக்தியாக இருக்கிறார்கள்.

நான் அடிக்கடி அரசு பள்ளிகளுக்கு செல்வது உண்டு, காரணம் ஏழைக்களின் பள்ளிபடிப்புக்கான கடைசி நம்பிக்கை, இன்னோரு காரணம், அரசு பள்ளிகள் தான் தற்போது தமிழ்நாட்டில் தமிழை வளர்த்துக்கொண்டுயிருக்கிறன.  இங்கே பலபேர் ஆங்கில மோகத்தில் அலைக்கிறார்கள், நான் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்வது ஆங்கில மோகத்தை துரத்திவிடுகள், ஆங்கில ஆற்றலை வளர்த்துவிடுங்கள் என்று சொல்லுவேன்,  நான் ஒரு ஐ.ஏ.எஸ்.  பயிற்சி மையத்திற்கு சென்றேன் அங்கே ஒருவர் 20 வார்த்தைகள் பேசும் போது என் தமிழன் அதில் 15 வார்த்தைகள் ஆங்கிலத்தில் கலந்து தமிழை பல முறைகொலை செய்கிறான். ஆனால் எனக்கு ஆங்கிலத்தை கொலை செய்பவர்களை எனக்கு பிடிக்கும். அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவி தேவிகா அப்படி தான் ஆங்கிலத்தை கொலை செய்து பேசி என் சபாஷ்யை பெற்றார்.

என்னை பாராட்டுகிற போது கூட எனக்கு சுமை தான். என் நேர்மையை மக்கள் நம்புகிற போது இன்னும் 5 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  நேர்மையாக இருப்பது மட்டும் அல்ல, அந்த பெயரை தக்கவைத்துக்கொள்வது அதை விட கடுமையாக இருக்கிறது. இதே போல என் தேசத்து தலைவர்களும், அரசியல்வாதிகள், இருந்துவிட்டால், இந்த தேசம் முன்னேறும் என்று நம்புகிறேன்.

தேசத்தந்தை காந்தியடிகள் இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளது என்றார். கிராமங்களின் வளர்ச்சி விவசாயிகளிடம் உள்ளது. ஆனால், விவசாயிகளின் இன்றைய நிலைமை வறுமையிலும், வெறுமையிலும் உள்ளது. 1997 முதல் 2006-ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் 1,66,304 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. இதேபோல, நெசவாளிகளின் நிலையும் உள்ளது. இதிலிருந்து சுதந்திரத்தின் பலன் விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் போய்ச்சேரவில்லை என்பது தெரிகிறது.

எல்லோரும் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள், நீங்கள் மட்டும் வேறு மாதிரியாக இருக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடத்தில் சொல்லுவார்கள், நான் அவர்களுக்கு சொல்லுவேன், இந்த தேசம் முழுவதும் ஊழலில் மடிந்தாலும், இந்த தேசத்தில் உள்ள அத்தனை பேரும் ஊழல்வாதிகளாக இருந்தாலும், நான் இப்படி தான் நேர்மையோடு இருப்பேன். நமக்கு இலக்கும் வேண்டும் இலட்சியம் வேண்டும் என்று மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லுவேன், இலக்கு என்பது எது தெரியுமா, நான் ..எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்பது இலக்கு, இலட்சியம் என்பது எது தெரியுமா? இந்த தேசத்தில் மிகச்சிறந்து நேர்மையான ..எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்பது என் இலட்சியம். இலக்கு எனக்கானது, இலட்சியம் இந்த சமூகத்திற்கானது.   ஆடம்பரத்தை விடுத்து, தன்னலத்தை விரும்பாமல், பொதுநலத்தை பேண வேண்டும்.

நாம் எப்போது துணிச்சல்மிக்கவர்களா ஆகிறோம், என்றால் நாம் எப்போதெல்லாம் ஆசைகளை தூக்கி எரிகிறமோ அப்போது எல்லாம் அதிகாரம் நாம் கையில் கிடைக்கிறது.  நான் இறுதியாக உங்களுக்கு சொல்வது சுயநலத்தோடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், பொதுநலத்தோடு இருந்தால் வரலாறு உங்களுக்கு சிறப்பாக அமையும். என் தாத்தாவின் வரலாறு எனக்கு தெரியாது, அவருடைய பிறந்தநாள் எனக்கு தெரியாது, ஆனால் மாறாக தேச முழுவதும் ஒரு தாத்தாவின் பிறந்தநாள் அக்டோபர் 2 எல்லேருக்கும் தெரிகிறது. என்ன காரணம், என்னுடைய தாத்தா குடும்பத்தோடு குறுகிபோனார். சுயநலத்தோடு சுருங்கி போனார், அதனால் அவருக்கு வரலாறு இல்லை,

a1

நான் மீண்டும் வயல் நிகழ்ச்சி என்று அழைப்பிதழில் போட்டுயிருக்கிறார்கள், நான் இந்த வயலில் நிகழ்ச்சிக்கு  அறுவடையை செய்ய வரவில்லை, விதைக்கவே வந்திருக்கிறேன். இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது மக்களுடைய அதிகாரம் என பொருள்படும். மக்களுக்கு கிடைத்த அதிகாரத்தை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், தற்போது மக்களுக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே .என் அன்பிற்குரிய தமிழக இளைஞர்களே சத்தியம் என்று சொன்னேன் சத்தியம் என்பது இளைய சமுதாயத்தினர் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். போராடுகள், லஞ்சம் ஊழலுக்கு எதிர்த்து எதிர்த்து நில்லுங்கள் அதுவே என்னுடைய ஆசையாக இருக்கிறது.  சட்டத்திற்கு உட்பட்டு போராடுங்கள் என்று உணர்ச்சி பூர்வமாக தன்னுடைய உள்ளத்தில் உள்ளதை மன திறந்து பேசினார்.

பேச்சின் இறுதியில் அரசியலுக்கு வருகிறீர்களா? என்று அங்கே பார்வையாளர்கள் எல்லோரும் அவரை மாறி மாறி கேட்டும் அவர் சளைக்காமல் சட்டத்திற்கு உட்பட சமூக தொண்டு செய்யுங்கள் நான் துணை நிற்கிறேன் என்று பேசினார்.

வழக்கத்திற்கு மாறாக சகாயம் கலந்து கொண்ட இந்த வயல் கூட்டத்தில் மாநில மத்திய உளவுத்துறை போலிசார்கள் குவிந்து இருந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக அரங்கு நிரம்பி வழிந்தது, அவர் வெளியே செல்லவே மிகவும் சிரமத்துடன் சினிமா நட்சத்திரத்திற்கு இணையாக வேகமாக தப்பிதான் வெளியேறினார் என்று தான் சொல்ல வேண்டும்.

a3

சகாயம் அரசியலுக்கு வரவேண்டும், முதலமைச்சராக வர வேண்டும் என்று சென்னையிலும், மதுரையிலும் பேரணி நடத்தியவர்களில் தன்னை முக்கியமானவராக அறிமுகப்படுத்திக்கொண்ட உமர் என்பவர்,  நாங்கள் நடத்தும் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் சகாயத்திற்கும் சம்மந்தமே இல்லை, சகாயத்தை நான் சந்தித்ததே இல்லை, மேடைக்கு மேடை பேசியவர், இந்த நிகழ்ச்சியில் தான் சார்ந்த தொண்டு நிருவனங்களின் தொண்டர்களோடு கலந்து கொண்டதோடு அங்கே இருந்தவர்களிடம்  சகாயம் அவரின் அடுத்தகட்ட பணிக்கு எங்களுக்கு உத்தரவு போட்டியிருக்கிறார் நாங்கள் மாவட்டம், மற்றும் வார்டு வாரியா நிர்வாகிகள் நியமனம் செய்து செயல்படபோகிறோம் என்று ஆலோசனை பண்ணிக்கொண்டுயிருந்தார்கள்,

நிகழ்ச்சியை கவிஞர் நந்தலாலா அவர்கள் தொகுத்து வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.