விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம்.

0 26

medianewsவிளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம்.
“””””””””””””””””””””””””””””””””””
ஊடக தர்மம், ஊடக நீதி, ஜனநாயகத்தின் ஜந்தாவது தூண் என்று பேசும் ஊடகங்களும் பத்திக்கைகளும், இப்போது உண்மையான ஊடக அறத்தின் படி செயல் படுகிறதா என்றால்! இல்லை என்பதே ஏதார்த்த உண்மையாக உள்ளது.

சமூகத்தில் சாதியாலும் மதத்தாலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அடித்தட்டு மக்களின் குரல்வளை நெறிக்கப்படும் போது ஒடுக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிக்கைகள்!

விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கான செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட்டு வியாபர நோக்கிற்கான செய்திகளையே பிரதான செய்திகளாக மாற்றுகின்றன.

அரசியல் கட்சிகளின் செய்திகளை “வார இதழ்கள்” அனைத்தும்! கடைசி பக்க விளம்பரமா? அல்லது நடுப்பக்க விளம்பரமா? அந்த கட்சி கொடுக்கும் விளம்பரத்தை பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றது.

மாணவர்களின் உரிமைக்கான நியாயமான போராட்டமா! அல்லது மலத்தை அள்ளி சாக்கடையிலேயே சமாதியாகும் சாபக்கேடா? இப்படி எதுவானாலும் அவர்கள் தரப்பு நியாயங்கள் எதுவும் பத்திரிக்கைகளில் துண்டு செய்தியாகக் கூட அரங்கேறுவதில்லை, அதையும் மீறி ஒரு ஓரத்திலாவது செய்தியாக வேண்டுமானால், அதற்கு அவர்களின் உயிர்கள் ஈடாக்கப்பட வேண்டும்.

மது ஒழிப்பு போராட்டமானலும் சரி, மக்கள் நலன் காக்கும் போராட்டமானலும் சரி, எந்த செய்திகளும் ஊடகங்கத் திரைகளில் ஒலிபரப்பு செய்யப்படாது, காரணம், ஊடக நிறுவனங்களுக்கு அதனால் எந்த பலனும் கிடையாது.

ஆட்சியாளர்களின் அலங்கோல நிர்வாகத்தை மறைப்பதற்கு அரசு கொடுக்கும் விளம்பரம் அதற்கான நிதியின் அளவைப் பொறுத்து, அந்த செய்தி அலங்கரிக்கப்பட்டு ஆகா ஒகோ என்று முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் நாள் இரண்டு கடைசிப்பக்க விளப்பரம் கொடுக்கப்படும், அந்த விளம்பர செய்தியே, அடுத்தநாள் தலைப்பு செய்தியாகி, அரசின் சாதனைகள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டும் விழா முதல் காணொலிக் காட்சியில் நடக்கும் திறப்பு விழா வரை அனைத்தும் நான்கைந்து முறை செய்தியாக்கப்படும்.

தமிழகத்தில் வெளிவரும் தினசரி பத்திரிக்கைகளில் சனி ஞாயிறு தவிற்து மற்ற நாட்களில் கடைசி இரண்டு பக்க விளம்பரத்திற்கு தினசரி பத்திரிக்கைகள் வாங்கும் ஒரு நாள் விளம்பரத் தொகை குறைந்த பட்சம் 75.லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை,

ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையும் அந்தந்த துறை சார்பாக மூன்று பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டால் ஆகும் செலவு 3×75= 2.கோடியே 25.லட்சம், சராசரியாக அரசு துறைகளின் சார்பாக ஆளும் அரசின் புகழ்பாட மக்களின் வரிப்பணம் வாரி வாரி இறைக்கப்படுகின்றது.

TNPC கட்டிட திறப்பு விழா முதல் தமிழகத்தின் கடை கோடி கிராம கக்கூஸ் திறப்பு விழா வரை ஆளும் அம்மையாரின் விளம்பரம் மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படுகிறது, அதுவே அடுத்த நாள் செய்தியாக முக்கியம் பெறுகிறது.

ஒரு நாளைக்கு அரசால் பத்திரிக்கைகளுக்கு கிடைக்கும் வருமானம் இரண்டு கோடியே 25.இலட்சம் என்றால் ஒரு ஆண்டில் அரசு விளம்பரங்களால் பத்திரிகைகள் அடையும் வருவாய் எவ்வளவு என்று, எண்ணிப்பார்க்க வேண்டும்,

ஊடக தருமம் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்குமா? அல்லது அரசு கொடுக்கும் விளம்பர வருவாய்க்கு வாய்பிளக்குமா?

வறுமையின் காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக விலைபோகும் விலைமாதர்கள் கூட அன்றாடம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அந்த மன அழுத்தம் இவர்களுக்கு வருமா என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்த்தனத்தையே காட்டும்.

இவர்களால்..
விலை போவது ஊடக தருமம் மட்டுமல்ல!
ஊடகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான்!!

Leave A Reply

Your email address will not be published.