வெளிநாட்டு வேலைவாய்ப்பு: திருச்சியில் மார்ச் 6-இல் நேர்முகத் தேர்வு

0 2

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெ012ற இருக்கிறது.

 இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல், 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில், தகுதி அனுபவத்திற்கேற்ப ஊதியம், இருப்பிடம், இலவச விமான பயணச்சீட்டு, அந்நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சலுகைகளும் அளிக்கப்படும்.

 எனவே இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடைய இளைஞர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டு, சுய விவரக் குறிப்புகள் அடங்கிய விண்ணப்பம், புகைப்படம் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) மார்ச்-6 ஆம் தேதி காலை 9 மணிமுதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தவறாமல் பங்கேற்றுப் பயனடையலாம்.

 இது தொடர்பான விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற நிறுவன இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.