மத்திய அரசுப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

0 2

மத்திய அரசுப்பணிக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம்-பெங்41களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மே 8-ஆம் தேதி ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய தலைமைச்செயலக சேவையில் உதவி பிரிவு அதிகாரி; சிவிசி, ஐபி, ரயில்வே, வெளியுறவு, ஆயுதப்படை தலைமையகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உதவியாளர்; வருமானவரித்துறையில் ஆய்வாளர், வரி உதவியாளர்; மத்திய கலால்துறையில் ஆய்வாளர்; மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஆய்வாளர்; அமலாக்க இயக்குநரகத்தில் உதவி அமலாக்க அதிகாரி; சிபிஐ மற்றும் என்ஐஏ ஆகியவற்றில் உதவி ஆய்வாளர்; அஞ்சல்துறையில் அஞ்சல் ஆய்வாளர்; மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் கோட்ட கணக்காளர், கணக்காளர், இளநிலை கணக்காளர், பட்டயக்கணக்காளர்; புள்ளியியல்துறை அலுவலகத்தில் புள்ளியியல் ஆய்வாளர்; பதிவுத்துறையில் தொகுப்பாளர்; பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் முதுநிலை தலைமைச்செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

2016 ஆக.1 ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை http://ssconline2.gov.in, http://sscregistration.nic.in ஆகிய இணையதளங்களில் செலுத்தலாம். இப்பணியிடங்களுக்கு சராசரியாக ரூ.38 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

பெங்களூரு போன்ற நகரங்களில் வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தால் ரூ.4500 கூடுதலாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.