வெறிச்சோடி கிடக்கும் கம்யூனிஸ்ட் ஆபீஸ் !

0 2

பொதுவாகவே தேர்தல் வந்துவிட்டால் கட்சி அலுவலகங்கள் பரபரப்பாகிவிடும். அரசியல் கட்சி தலைவர்கள், பார்வையாளர்கள் என பலரும் வந்து சென்றவண்ணம் இருப்பார்கள். அலுவலக வாயிலில் டீ விற்பவர்கள் தற்காலிக கடை போட்டிருப்பார்கள். போலீசார் காவலுக்கு நிற்பார்கள்.
ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் சாலையை ஒட்டியுள்ள அலிமுதீன் ெதருவுக்கு சென்றால், அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலம் எந்த பரபரப்பும் இல்லாமல் தேமே என்று காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி இது.

இப்போது சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இருப்பினும், தனித்து விடப்பட்டது போல எந்த ஆராவாரமும் இல்லாமல் இருக்கிறது மேற்கு வங்கத்தில் உள்ள இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பதை கூட ஆட்சியில் இல்லாத இந்த ஆண்டுகளில் இக்கட்சி சிந்திக்கவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘மம்தா பானர்ஜி என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்பதற்கும், அவர் செயல்படுவதற்கும் இரண்டு ஆண்டுகள் நாங்கள் அவகாசம் அளித்தோம்…’ என்றார்.

அதேநேரத்தில், நந்திகிராமில் கார் தொழிற்சாலைக்கான இடத்தை கையகப்படுத்துவதில் விவசாயிகளை கையாண்ட விதத்தில் உள்ள தவறு பற்றியும் குறிப்பிட்டார். இதுபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு ஆட்சியில் இருந்தபோது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் ஆதரவு அளிக்காமல் விலகி இருந்தது காங்கிரஸ் கட்சியுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் நட்பு பாராட்டுவதற்கு வழி வகுத்துவிட்டது என்றார்.
முசாபர் அகமத் பவனில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர், கடந்த எட்டு மாதங்களாக நாங்கள் மாநில அரசுக்கு எதிராக கூட்டங்கள் நடத்தியிருக்கிறாம். காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இல்லை என்கிறார். இப்படி மாநில பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு விதமாக கருத்து தெரிவிக்கிறார்கள். என்ன… அவற்றை எல்லாம் கேட்கத்தான் கட்சி அலுவலகத்தில் ஆளில்லை. காற்று வாங்கியபடி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.