7ஆயிரம் ரூபாய்க்கு தத்தெடுக்கப்பட்ட கவிஞர் கண்ணதாசன் !

0 16
kannadasan 3
கண்ணதாசன் குடும்பம்

7ஆயிரம் ரூபாய்க்கு தத்தெடுத்து வளர்க்கபட்ட கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று

அண்ணனென்னடா தம்பி என்னடா என்ற இந்த வரிகளில் சொந்தங்களை பற்றியும், உறவுகளை பற்றியும், குறிப்பட்டதோடு, பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிற்க்குஉணர்த்தியவர்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா என்ற இந்த பாடல் வரிகள் மூலம் யார் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு அவர்கள் சரியாக இருந்தால் எல்லாருக்கும் நன்மை என்பதை அறிவுறுத்தியவர் இப்படி மொத்தம் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களின் மூலம் ஒவ்வொருவரின் இதயத்திலும் நீங்கா இடம்பிடித்தவர்.

விஷ்வநாதன் ராமமூர்த்தி, கே.விமகாதேவன், இளையராஜா வரை இசை அமைப்பாளர்களின் இசைக்கு தன்னுடைய வரிகள் மூலம்உயிர் கொடுத்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் 1957ல் மகாதேவி என்ற படத்திற்க்கு தன்னுடைய பாடல்களை சமர்பித்தவர். 1981ல் இவர் இந்த மண்ணைவிட்டு பிரிந்தாலும் அவருடைய பாடலில் ஒன்றாக இருந்த கண்ணே கலைமானே என்ற பாடல் 1983 இளையராஜாவின் இசையில் கண்ணதாசனை நினைவுக்கு கொண்டு வந்தது.

kannadasan 4
கலைஞர் கருணாநிதியும் – எம்.ஜி.ராமசந்திரனும் இவர்களுடன் கண்ணதாசன்

குடும்பத்தின் வறுமையை முழுமையாக உணர்ந்ததால் தான் இவர் வாழ்வில் எட்டிபிடிக்க முடியாத உயரத்திற்க்கு கொண்டு சென்றது என்பது ஒவ்வொருவராலும் ஏற்றகொள்ள வேண்டிய செய்தி, அதற்க்கு காரணம் சிறுவயதில் உடன் பிறந்த 8 பேருடன் சேர்ந்து தன்னுடைய வாழ்நாளை வாழ முடியமால் பெற்றோர் அடையாளம் தெரியாத ஒருவருக்கு என்னை 7ஆயிரத்திற்க்கு விற்பனை செய்து அதன் மூலம் அவர்களின் வறுமையை போக்கி கொண்டுள்ளனர். தத்தெடுத்து வளர்க்கப்பட்டு நாராயணன் என்று அழைக்கப்பட்ட கண்ணதாசன் தான் தமிழகத்தின் அரசவை கவிஞனாக உயர்ந்தவர்.

பாரதியின் பாடல்கள் மீது ஆர்வம் கொண்டவர் அவரை தன்னுடைய குருவாக ஏற்று கொண்டு வரிகளுக்கு எப்போதும் மதம் ஜாதி என்பது இல்லை என்பதை உணர்த்த எழுதப்பட்டது தான் இந்த ஏசு காவியம் இவர் இந்துவாக இருந்தாலும் ஏசுகாவியம் எழுதியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

சாதி, மதங்களை கடந்த ஒரு சகாப்தம் பல வெற்றிகளை கண்டெடுத்து. அதில் சேரமான் காதலி படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருது, 1968ல் இயக்குநர் பி.மாதவன் படைப்பில் வெளியான குழந்தைக்காக என்ற படத்தில் சிறந்த வசனத்திற்காக தேசிய விருது பெற்றார்.

kannadasan 2
சிலையாய் நீங்கா நினைவுகளுடன்

அதோடு நின்றுவிடவில்லை கவிதை நூல்கள், காப்பியங்கள், தொகுப்புகள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, புதினங்கள், வாழக்கைச்சரிதம், கட்டுரைகள், சமயம், நாடகங்கள், உரைநூல் என பன்முக தன்மையோடு தன்னை நிலை நிறுத்தியதோடு, தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்தவர் கண்ணதாசன்

1927 ஆம் ஆண்டு ஜீன்24ல் கண்ணதாசனாக பிறந்த அவர் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசனாக இந்த உலகை விட்டு மறைந்தார்.

அவருடைய ஒவ்வொரு படைப்புகளிலும் காரை முத்து புலவராகவும், வணங்காமுடியாகவும், கமகப்பிரியாவாகவும், பார்வதிநாதனாகவும், ஆரோக்கியசாமியாகவும் பல புனை பெயர்களோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்த நாள் என்று இன்று மட்டும் அவரை நினைக்கவில்லை இந்த திரை உலகம் அவருடைய பாடல்கள் இன்று ஒவ்வொரு குடிசைகளுக்குள்ளும் உயிரோட்டங்களாக வாழந்து கொண்டிருக்கிறது.

கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன் மனிதர்களாலே…. , கடவுள் அமைத்து வைத்த மேடை…, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… இது போன்ற பாடல் வரிகளில் தினம் தினம் அவர் பிறந்து கொண்டுடிருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.