சென்னையில் தொடரும் பெண்கள் படுகொலை

0 3

சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கம் மற்றும் வடசென்னையில் ஒரு பெண்ணும் என அடுத்தடுத்து நிகழ்ந்த படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னராசு. பட்டினம்பாக்கத்தில் பலகாரக் கடையில் வேலை பார்த்து வந்த அவருக்கு பவித்ரா(18), பரிமளா(19), சினேகா(16) ஆகிய மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மனைவி சந்தன வீனா(36) உடன் சின்னராசு வசித்து வந்தார்.ku

இவர்கள் கடந்த வாரம் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று சென்னை திரும்பினர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இவர்களது வீடு பூட்டியே இருந்துள்ளது. இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து அருகிலுள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று போது, அங்கு நான்கு பெண்களும் நிர்வாண நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான சின்னராசுவை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் இன்று chiகாலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவன பெண் ஊழியரும், முகப்பேரில் ஒரு பெண்ணும் என 6 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் நான்கு வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.