செந்தில்பாலாஜியை வீழ்த்தியது தம்பிதுரையா ?

0 8

senthil-balajiகரூர் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் நடந்தன அதற்கு காரணகர்த்தா துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தான் என்பது யாருக்கும் தெரியாது. அதைப்பற்றி அப்படி என்னதான் நடந்தன என்பது பற்றி விசாரிக்க நமது நிருபர் டீம் களத்தில் இறங்கியது. களத்தில் இறங்கிய பின்புதான் தெரிந்தது பல கலேபரங்கள் நடந்துள்ளன என்று. அதாவது கரூர் செந்தில்பாலாஜியை அரசியலை விட்டே ஒழிக்க வேண்டும் என்பதுதான் தம்பிதுரையின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது.

அதற்கு காரணம் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது செலவுக்கு ஒரு தொகையை கொடுத்து விட்டு மீதி தொகையை நீங்கள் கொடுங்கள், தேர்தல் முடிந்த பின்பு கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது செந்தில்பாலாஜியும் பைனான்ஸில் 12 கோடியை வாங்கி கொடுத்துள்ளார். தேர்தல் முடிந்து 3 மாதம் கழித்து அந்த தொகையை திரும்ப கேட்டபோது அம்மா கேஸ் விசயமாக நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லி நாட்களை கடத்தியுள்ளார். பொறுத்துப் பார்த்த செந்தில்பாலாஜியோ இதற்குமேல் என்னால் வட்டி கட்ட இயலாது உடனே பணத்தை செட்டில் செய்யுங்கள் என்ற கராராக சொல்லியுள்ளார்.

senthil-balaji-thambidurai-இதற்கு பின் தம்பிதுரை இவனை எப்படியாவது அமைச்சர் பதவியில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தூக்க வேண்டும் என்று முடிவு செய்து ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் அணியுடன் சேர்ந்து அதற்குண்டான வேலைகளை தொடங்கியுள்ளார். ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருந்தபொழுது தமிழகத்திலேயே அதிகப்படியான பூஜைகள் கரூர் மாவட்டத்தில்தான் நடைபெற்றது. இந்த பூஜைகளை மாவட்ட செயலாளர் என்ற முறையில் ஏற்பாடு செய்தது செந்தில்பாலாஜிதான், ஆனால் இவை அனைத்திலும் முன்னின்று சங்கல்பம் செய்து மாலை போட்டு பிரசாதங்கள் பெற்றது எல்லாம் தம்பிதுரை தான் என்பது உலகறிந்த விசயம்.

thambidurai-sendhil-balaji-ஆனால் அதே தம்பிதுரை, ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் அணி செந்தில்பாலாஜியை காலிசெய்ய இந்த பூஜை விசயத்தை கையில் எடுத்து ஜெயலலிதாவிடம் போய் அம்மா கரூரில் இவ்வளவு பூஜைகள் எல்லாம் செந்தில்பாலாஜி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் செய்தார் என்று சொல்லி ஒரே நாளில் அவரது அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் காலி செய்தனர். அதன் பின்பு 2014 தேர்தலுக்காக கொடுத்த 12 கோடியை திருப்பிதர முடியாது உன்னால் முடிந்தால் எங்க போய் சொல்வியோ சொல்லி வாங்கிக்கொள் என்று சொல்லி செந்தில்பாலாஜியோ வாய்மூடி மௌனியாக இன்னமும் அந்த பணத்திற்கு வட்டி கட்டிக் கொண்டிருப்பதாக தகவல்.

தம்பிதுரை இந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று சொல்லியதோடு மட்டும் நிற்க்காமல் 2016 தேர்தலில் செந்தில்பாலாஜி சீட்; வாங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கொடுத்துவிட்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தம்பிதுரை இதன் பின்புதான் கரூரிலும், அரவக்குறிச்சியிலும், அ.இ.அதிமுக தலைமையிடத்திலும் பல கலேபரங்களை நுணுக்கமாக நிகழ்த்தியுள்ளார்.

அரவக்குறிச்சியில் என்ன செய்தார் என்று பார்க்கையில் –

விஜயபாஸ்கர் - போக்குவரத்துரை அமைச்சர்ஆரம்பத்தில் செந்தில்பாலாஜி கே.சி.பழனிசாமியிடம் தோற்றுவிடுவார் என நினைத்தார். ஆனால் செந்தில்பாலாஜியோ கடைசி வரை 60 கோடி வரை செலவு செய்துவிட்டார் இனிமேல் அது நடக்காது என தெரிந்தவுடன், தனது சொந்த பணத்தில் 5 கோடியை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜூவின் பைனான்ஸ் பார்ட்னர் சின்னதாராபுரம் முத்துசாமி மற்றும் V.K.A பஸ் கம்பெனி மேலாளர் மணி ஆகிய இருவரிடம் கொடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஊர்களில் கோவில்களுக்கு செந்தில்பாலாஜி என்ன கொடுத்தாரோ அதே தொகையை நீங்களும் கொடுத்து அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தொகுதி முழுக்க செய்ய சொல்லியிருக்கிறார். அதிலும் திருப்தி அடையாத தம்பிதுரை இவனது வெற்றியை தடுக்க ஒரே வழி தேர்தலை ரத்து செய்வதுதான் என நினைத்து அதற்குண்டான வேலையை தனது நண்பர் உசைனிடம் வழங்கி உள்ளார்.

அவரோ அதற்குண்டான வேலையை ஆரம்பித்து தேர்தல் ரத்தாக வேண்டும் என்றால் அதற்காக குற்றச்சாட்டுகள் நிறைய வர வேண்டும் என சொல்லி அதற்கென ஒரு டீமை ரெடி பண்ணி 5000 குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இதில் அன்புநாதனின் பண விவகாரமும் ஒன்று. இதனால் தேர்தல் ரத்தானது. தம்பிதுரையின் எண்ணம் நிறைவேறியது.

கரூரில் என்ன செய்தார் –

              அப்போதைய வேட்பாளரும் இப்போதைய அமைச்சருமான விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வரணியிடம் சில ஆலோசணைகளை ஆரம்பத்திலேயே வழங்கி உள்ளார். அது என்னவென பார்க்கையில், கரூர் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பேங்க் சுப்பிரமணி காசு செலவு செய்ய மாட்டார் என செய்தியை வெளியில் பரப்புங்கள் அப்படி செய்தால் அது செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் செய்கிறார் என்ற செய்தியை ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் பரப்புங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வரணி அந்த வேலையை செய்யத் தொடங்கியது.

                2011ல் கரூர் நகராட்சித் தேர்தலில் தனது மகன் போட்டியிட்ட போது ஓட்டுக்கு 1000 வழங்கியவர் தற்போது 2016 தேர்தலில் தான் சீட்டு வாங்கும் முன்போ கே.சி.பழனிச்சாமியிடம் ரூபாய்   5 கோடியை கொடுத்து விட்டுதான் சென்னை சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் 50 லட்சம் கொடுத்து சீட் வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட பேங்க் சுப்பிரமணி பல பைனான்ஸ்களில் பங்குதாரர். அவரது மாத வருமானம் 60 – 70 இலட்சம்  என்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க இவர் சீட் வாங்கி கரூர் வந்த உடன் சிலைக்கு மாலை போட 3000 டூவீலர்களுடன் சென்றார். அப்போது இது செந்தில்பாலாஜியின் காசு அதனால்தான் இவ்வளவு செலவு செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் என அந்த நால்வர் அணி மக்களிடம் பரப்ப ஆரம்பித்தனர் அடுத்த நாள் பஸ்ஸடாண்ட் ரவுண்டானா அருகில் பணிமனை திறப்பு விழா அதில் 10000 பேர் கலந்துகொண்டவுடன் இதுவும் செந்தில்பாலாஜி காசுதான் என நால்வர் அணி செய்தியை பரப்பியுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் விஜயபாஸ்கர் தரப்பு போட்டி கடுமையாக இருப்பதாக கருதி பேங்க் சுப்பிரமணி தரப்பிடம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் சமரசம் பேசி உள்ளனர். இருவரும் சமமாக தலா 300 கொடுக்கலாம் என்றும் அதற்கு இருதரப்பும் ஓகே ஆக அதன்படி பேங்க் சுப்பிரமணி தரப்பு 300 கொடுக்க ரெடியாகி உள்ளது. ஆனால் விஜயபாஸ்கர் தரப்பு பேங்க் சுப்பிரமணி தரப்பிற்கு தெரியாமல் 500 கொடுக்க ரெடியாகி உள்ளது. இது பேங்க் சுப்பிரமணி தரப்புக்கு தேர்தலுக்கு 5 நாட்கள் உள்ள நிலையில் தெரியவர பேங்க் சுப்பிரமணியும் அவரது மகன் ஜெகதீசனும் நம்மிடம் சமரசம் பேசி ஏமாற்றிவிட்டு தற்போது 500 கொடுக்க நினைக்கிறார்கள். நாம் இதை யாரிடமும் சொல்லாமல் 1000 கொடுப்போம் அதுவும் உடனடியாக கொடுப்போம் என அப்பாவும் மகனும் முடிவு செய்து அதன்படி ஓட்டுக்கு 1000 வீதம் கரூர் மாவட்டத்திலேயே முதல் ஆளாக பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதை கண்டு மிரண்டு போன விஜயபாஸ்கர் தரப்பு செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் பேங்க் சுப்பிரமணி 1000 கொடுக்கிறார் என கட்சி, மீட்டிங், பொதுமக்கள் என அனைத்து இடங்களிலும் விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வர் தரப்பு பகிரங்கமாக பிரச்சாரம் செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி உள்ளனர். ஆனால் செந்தில்பாலாஜி தரப்போ அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார் என தெரியாமல் மண்ணை கவ்விக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வாறு இது சாத்தியம்?

ஆக, இறுதியாக தம்பிதுரை கொடுத்த ஆலோசணை படி விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வர் அணி கட்சி ஆபீஸில் நடந்த கட்சிக்காரர்கள் ஆலோசணைக் கூட்டத்திலயே செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் காங்கிரஸ் வேட்பாளர் 1000 பணம் கொடுக்கிறார் என்று சொல்லி அனுதாப அலை தேடியிருக்கிறார்கள். இதை அப்படியே தலைமைக்கு புகாராக கொண்டு சென்று செந்தில்பாலாஜியை மொத்தமாக காலி செய்ய தம்பிதுரை செய்த மிகப்பெரிய திட்டம் நிறைவேறி உள்ளது என்பது நமது நிருபர் டீம் துள்ளியமாக கண்டுபிடித்தது.

அடுத்து  என்ன தலைமைக்கு   செய்தார் –

                கரூரில் பணம் பிடிபட்ட அன்புநாதன் என்பவர் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்களது பணம் ஏராளமாக இருந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட தம்பிதுரை நுணுக்கமாக செந்தில் என் பெயரிலேயே ஒரு சிம் கார்டு வாங்கி அந்த போனிலிருந்து தேர்தல் கமிசன் லக்கானிக்கு போன் செய்து நான் செந்தில்பாலாஜி பேசுகிறேன் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் பணம் ஏராளமாக உள்ளது உடனே புடியுங்கள் என்று யாரையோ வைத்து பேசியுள்ளார். அதன்படி தேர்தல் ஆணையமும் அங்கு சென்று 4.75 கோடி பணத்தை கைப்பற்றியது. அப்போது சாதூர்யமாக தம்பிதுரை அன்புநாதனுக்கு போன் செய்து இதற்கெல்லாம் காரணம் செந்தில்பாலாஜிதான் என்று சொன்னால் நான் அம்மாவிடம் பேசி உன்னை காப்பாற்றுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதே கருத்தை ஜெயலலிதாவிடம் போய் ஓபிஎஸ், நத்தம் ஆகிய இருவரும்தான் அன்புநாதனிடம் கொடுத்து வைத்தள்ளனர். அவன் சரியில்லாதவன் இதை தெரிந்து கொண்ட செந்தில்பாலாஜிதான் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளான் என்று ஒரே கல்லில் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், செந்தில்பாலாஜி என மூவரையும் டேமேஜ் செய்துள்ளார். ஏன் இந்த டேமேஜ் என்றால்  ஓபிஎஸ், நத்தம் காலியானால்தான் அந்த இடத்திற்கு வரமுடியும் என கணக்கு போட்டு கனக் கச்சிதமாக காரியத்தை முடித்துள்ளார்.

                ஆக இந்த தேர்தலில் துணை சபாநாயகர் தம்பிதுரை பல கலோப கலவரங்களை ஏற்படுத்தியிருக்கிறார். ஆக மொத்தத்தில் செந்தில்பாலாஜிக்கு 2014 தேர்தலில் கொடுக்கவேண்டிய 12 கோடி பணத்தையும் தராமல் 2016 தேர்தலில் அவர் நினைத்த கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி காரியங்கள் அனைத்தையும் கனக் கட்சிதமாக முடித்துள்ளார். ஆக மொத்தத்தில் அரவக்குறிச்சியில் 60 கோடி வரை செலவு செய்துவிட்டு தம்பிதுரை, விஜயபாஸ்கர், காளியப்பன், நெடுஞ்செழியன் செய்த நூதன உள்குத்தில் மாட்டி ரோட்டில் நிற்பது என்னவோ செந்தில்பாலாஜி என நினைக்கையில் நம் மனம் மிகவும் பரிதாபப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்து தீடீர் என இணையத்தில் நமது நிருபர் குழு என்கிற பெயரில் உலாவ துவங்கியுள்ளது.    செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து அவருடைய நீண்ட விளக்கம் போல தான் காட்சியளிக்கிறது. இனி தம்பித்துரை தரப்பு என்ன செய்ய போகிறது என்பதை   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.