திருச்சி பெல் நிறுவனத்தில் தேர்தல் 6 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம்.

0 2

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 6 சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 891 வாக்குகள் பெற்று திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. முதலிடம் பெற்றது.

பெல் நிறுவனத்தில் சம்பள உயர்வு, தொழிலாளர் பிரச்சனைBHEL_Logo.jpg123 உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தொழிற்சங்கமான தொமுச, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன், ஏஐடியுசி, சிஐடியு, பிஎம்எஸ், ஐஎன்டியுசி,  பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், பிஎன்எஸ்யு, பிபியு ஆகிய 10 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.

பெல் நிறுவன வளாகத்தில் காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 5,809 வாக்காளர்களில் 5 பேர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் 5,804 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 5,594 வாக்குகள் பதிவானது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நள்ளிரவில் அறிவிக்கப்பட்டன.

இதில் தொமுச 891, அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் 814, அண்ணா தொழிற்சங்கம் 730, சிஐடியு 655, பிஎம்எஸ் 634, ஏஐடியுசி 559 வாக்குகள் (10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்) பெற்று வெற்றி பெற்றன. இந்த 6 சங்கங்களும் பெல் நிர்வாகத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க  தகுதி பெற்றுள்ளன.

இதில் ஐஎன்டியுசி 541, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் 326, பிஎன்எஸ்யு 307, பிபியு 119 வாக்குகள் பெற்று, வெற்றிவாய்ப்பை இழந்தன. பதிவான வாக்குகளில் 18 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

இதில் அதிக வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக தேர்வு பெற்ற தொ.மு.ச. சார்பில் 2 உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம். இச்சங்கம் தொடர்ந்து 5-ஆவது முறையாக முதன்மை சங்கமாக தேர்வு பெற்றுள்ளது.

கடந்த முறை தொமுச, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஐஎன்டியுசி, அம்பேத்கர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட தகுதி பெற்றிருந்தன. இதில் ஐஎன்டியுசி மட்டும் இந்த முறை தகுதி பெறவில்லை. பிஎம்எஸ், ஏஐடியுசி ஆகிய சங்கங்கள் புதிதாக அங்கீகாரத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.