மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

0 2

மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட Communist-Party-demonstration--Basic-facilitiesகீழபொய்கைப்பட்டியில் காவிரி குடிநீர் வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கல்பாளையத்தான்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கீழபொய்கைப்பட்டி கிளைச் செயலாளர் பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது கஸ்பா பொய்கைப்பட்டி காவிரி குடிநீரேற்று நிலையத்தில் இருந்து நேரடியாக கீழபொய்கைப்பட்டி, கீழ எருதிக்கவுண்டம்பட்டி, பொன்னம்பலத்தான்பட்டி, வன்னான்குளத்துப்பட்டி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு வழங்கவும், கீழபொய்கைப்படடியில் கூடுதல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட வேண்டும்.

கீழபொய்கைப்பட்டியில் இருந்து மதுரை மெயின்ரோடு வரை செல்லும் இணைப்பு சாலை மற்றும் கல்பாளையத்தான்பட்டியில் இருந்து புதுப்பட்டி வழியாக மலையடிப்பட்டி செல்லும் சாலைகளை புதுப்பித்திட வேண்டும், மணப்பாறை பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பாலினை நிறுத்தாமல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் கணேசன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர் தங்கராசு, நகரச் செயலாளர் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் துணைச் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.