எவரஸ்டு சிகரத்தை தொட்டதாக கூறி ஊரை ஏமாற்றிய போலிஸ் தம்பதி

0 5

     மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை இணைந்து தொட்ட முதல் தம்பதி தாங்கள்தான் என்று இருவரும் பெருமை அடித்திருந்தனர்.

dc8d9a66df7ab61a538ab240517851a7_Lஆனால் அது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. இன்னொருவரின் படத்தை எடுத்து அதை இவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு தற்போது அசிங்கப்பட்டுள்ளனர்.
அந்தத் தம்பதியின் பெயர் தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி. இவர்கள் ஜூன் முதல் வாரத்தில் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் நிற்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இதனையடுத்து இருவரும் மகாராஷ்டிரா முழுவதும் பிரபலமாகினர்.

இவர்களின் திருட்டுத்தனத்தை புனேயைச் சேர்ந்த சுரேந்திர ஷெல்கே என்ற மலையேற்ற வீரர்தான் முதலில் கண்டுபிடித்தார். இந்தத் தம்பதி எடுத்துப் பயன்படுத்திய புகைப்படத்தில் உண்மையில் இருப்பவர் சத்யரூப் சித்தாந்தா என்பவர். அவரது புகைப்படத்தை எடுத்துத்தான் இந்த மகாராஷ்டிர போலீஸ் தம்பதி மார்பிங் செய்து ஏமாற்றியுள்ளது.

இதற்காக நேபாள அரசிடமிருந்து சான்றிதழையும் வாங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தாரகேஸ்வரி விளக்கம் தருகையில் தற்போது இந்த விவகாகரம் விசாரணையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். மேலும் நேபாள அரசும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.