புதிய பாலம் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

0 2

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலங்கள் கட்டுமானப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் ஆய்வு செய்தார்.201606300246298797_The-building-of-a-new-bridge--MLA-Review_SECVPF

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்பத்து ஊராட்சியில் துடையூர் – புக்காத்துறை இடையே பங்குனி வாய்க்காலில் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும், பெருவளை வாய்க்காலில் 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும், இருங்களுர் ஊராட்சியில் பெருவளை வாய்க்காலில் 23 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டுமானப்பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, ஒன்றிய ஆணையர் ராஜா, சேர்மன் வெற்றிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், சடையன், சண்முகராஜா, பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டியன், ஜெயராக்கினி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.