பொன்மொழிகள்

0 23

காலம்

ஒரு யுகத்திற்குப் பிறகு மற்றொரு யுகம் என்று யுகங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் காலத்தின் போக்கு எந்த விதத்திலும் பாதிக்கப் படாமல், ஒரே ரீதியில் இருந்து வருகிறது. தாமரைக்கு நிலவு எமனாக அமைகிறது. அதுபோல் மனிதனின் வாலிபப் பருவம் என்ற தாமரைக்குக் காலம் எமனாக அமைந்திருக்கிறது.

குரு

குருவின் ஸ்தூல உடல் மறைந்த பின்னும் அவருடனான உறவு தொடரும். உலகத்தில் ஒரு ஞானி இருந்தால் போதும். அவரது செல்வாக்கு, சீடர்களால் மட்டும் அல்லாது, அனைவராலும் உணரப்படும்; எல்லோருக்கும் பயன் படும். அகந்தையாகிய மதம் பிடித்த யானையை வெல்லும் குருவின் சக்திக்கு ஈடாக, ஆயிரம் யானைகளை வெல்லுதல் என்பது மிகச் சாதாரணம்.

தீமை

எந்தச் செயலின் பலனும் நன்மை, தீமைகளின் கலப்பாகவே இருக்கும். தீமை கலவாத நற்செயல் எதுவும் கிடையாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல, செய்யும் செயலை எப்போதும் சிறிதாவது தீமை ஒட்டியே இருக்கிறது. எனவே அதிக நன்மையையும், குறைந்த தீமையையும் தரும் செயல்களை நாம் செய்ய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.