பா.ஜனதா தலைவர் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் நடந்த திக் திருமணம்

0 2
ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது புகார் கொடுத்து உள்ளது.
bjp copyகோட்டா பகுதியில் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி நடைபெற்று உள்ளது. சிறுமியின் பள்ளி சான்றிதழ் படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005 ஆகும். சிறுமிக்கு 11-வயது ஆன நிலையில் முன்னா திருமணம் செய்து உள்ளார். இதற்கிடையே திருமணம் செய்வதாக உறவுக்கார பெண் ஒருவரை ஏமாற்றி வந்து உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது. உறவுக்கார சிறியையே முன்னா திருமணம் செய்தாக இருந்தது, ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் இளம் வயதில் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இதனால் முன்னா மற்றொரு சிறுமியை திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி முன்னா என்னை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம் சாட்டிஉள்ளார் என்று ஆங்கிலப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.
இதற்கிடையே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரிதிஷ் குமார் பேசுகையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. தகவல் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். மரந்தியின் மகன் பாகான் பாஸ்கி என்பவருடைய 4வது மகளை திருமணம் செய்து உள்ளார் என்று கூறிஉள்ளார். இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து உளனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீபிகா பாண்டே சிங்கும் பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார். மேலும் போலீஸ் முன்னாவிற்கு எதிராக எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிஉள்ளார்.
இதற்கிடையே ஜார்க்கண்ட் முதல்மந்திரி ரகுபார் தாசும் வரவேற்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தது, கடையில் கைவிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டிஉள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.