நீங்கள் நல்ல அப்பாவா உங்களுக்கான டிப்ஸ்

0 21

Child playing in the rain

குழந்தைகள் வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் தரும் டிப்ஸ்…

* பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.

* பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

* ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அப்போதுதான், வாரக் கடைசியில் ஊர் சுற்றுவது குறையும். ஒருவேளை, நண்பர்களிடம் வாங்கினால், அதையும் இந்தப் பாக்கெட் மணியில் இருந்துதான் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிடுங்கள்.

* இரவு தாமதமாக வந்தால் ‘கதவைத் திறக்க மாட்டோம்… நீ கோபித்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குப் போனால், அப்படியே மறுநாளும் அங்கேயே இரு’ என்று சொல்லுங்கள். நீண்ட நாட்கள் நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்.
உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான விளைவுகளைச் சந்திக்கவிடுங்கள். பிரச்னையாகிவிடக் கூடாது என்று அவர்களைத் தப்பிக்கவைத்தால், அது உங்களுக்குத்தான் வினை.

* சேமிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பழக்குங்கள். அந்தச் சேமிப்பில் இருந்து தனது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உடன்பிறந்தவர்களுக்கு அன்பளிப்பு வாங்கித்தரச் சொல்லுங்கள். அதனால் பகிர்ந்துகொடுத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல உணர்வுகள் அவர்களிடம் உருவாகும்.

* குழந்தைகள் வளரவளர பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டிபோல ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள். ஆதரவற்றக் குழந்தைங்களுடன் உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். அப்போதுதான், நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்பதும், அப்பா அம்மாவுடைய அருமையும் அவர்களுக்குப் புரியும்.

* பிள்ளைகளுக்கு 13, 14 வயது வரும்போது, நீங்கள் குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில் அவர்களையும் உட்காரவையுங்கள். அப்போதுதான், ஒவ்வொரு காசுக்கும் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது புரியும்.

* ‘வீட்டைவிட்டு ஓடிப் போய்டுேவன்’னு குழந்தைகள் அடிக்கடி சென்டிமென்ட்டா மிரட்டுவார்கள். ‘போனா போ’ என்று சொல்லாமல், ‘நீ போனா நாங்க எவ்ளோ வருத்தப் படுவோம் தெரியுமா?’ என்று நீங்களும் அதே சென்டிமென்டால் அடிங்க.

* பிள்ளைகள் உங்களிடம் பேசவரும்போது அவர்கள் சொல்வதில் கவனம் செலுத்துங்கள். அந்த நேரத்தில் மொபைலில் பேசுவது, டி.வி பார்ப்பது போன்றவற்றைத் தவிருங்கள். முக்கியமான வேலையில் இருந்தால், வேலை முடிந்தபிறகு அவர்களிடம் பேசுங்கள்.

* உங்கள் குழந்தையுடன் தினமும் முடிந்த அளவு நேரத்தைச் செலவழியுங்கள். பிறர் மீதான கோபத்தைக் குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.

* கணவன், மனைவி சண்டையை ஒருபோதும் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.

* ஸ்கூல், காலேஜில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் மீட்டிங் என்றால் தவறாமல் செல்லுங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் பற்றித் தெரியவரும்.

* உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பு எண்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.