திருச்சியில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் துவக்கம்

0 17

அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த போட்டியில் 250 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி வசந்த் டென்னிஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 10, 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே ஒற்றையர் போட்டிகளும், சீனியர் பிரிவில் இரட்டையர் போட்டிகளும் நடத்தப்படுகிறது.

நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 250 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் முசிறியைச் சேர்ந்த நவீன், திருச்சி விளையாட்டு விடுதியைச் சேர்ந்த சித்தார்த்தை எதிர்த்து விளையாடினார். இதில் நவீன் 4-0 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்றார்.

மற்றொரு போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிதேவ் பெரம்பலூரைச் சேர்ந்த கரன்பாலாஜியை எதிர்த்து விளையாடினார், இந்த போட்டியில் ஹரிதேவ்  4-0 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்துவருகின்றனர். முன்னதாக இப்போட்டியினை முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.கலியமூர்த்தி தொடங்கிவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.