நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்றும் திருச்சி பெண்கள்.

0 8

இயற்கையின் வர பிரசாதமான நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்ற நினைக்கும் பெண்கள்.

பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் விட்டு சென்றது இந்த இயற்கை மூலிகைகள் தான், ஆனால் கடந்த 30 வருடங்களாக இயற்கை மூலிகை மருத்துவங்களை நவீன ஆங்கில மருத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கியுள்ளது.nature medicine story (10)

இயற்கை மருந்துகளின் பயன்பாட்டை உருக்குலைய செய்த ஆங்கில மருந்துகள் தற்காலிக வலி நிவாரணியாகவும். பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதும் தான் மிச்சம் அதில் சிக்கிய பலருடைய வாழ்க்கை இன்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளின் ஆதிக்கத்தால் துவண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.nature medicine story (8)

ஒவ்வொரு மனிதனும் தலைவலி, காய்ச்சல், கை, கால் வலிகள், இடுப்பு வலி, முதுகு வலி, பல்லு வலி, என்று பல வலிகளை அடுக்கி கொண்டே போகும் இந்த சமூகத்தில் இயற்கை மருத்துவம் தான் பெரும்பாலான பங்கு வகிக்கிறது. இந்த வலிகளுக்கு எல்லாம் இலைகளை கொண்டு கசாயம்  வைத்து குடிப்பார்கள், அல்லது இலைகளை அறைத்து உடல முழுதும் தடவி விடுவார்கள்.nature medicine story (5)

இப்படி நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த இயற்கை மூலிகைகளை இந்த இரண்டாம் தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போக துவங்கியுள்ள நிலையில் தற்போது பெருகி வரும் நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்களால் தீர்வு காண முடியாமல் பல மருத்துவர்கள் இயற்கை மூலிகைகளை நம்பி அவர்களுக்கு இயற்கை மூலிகைகளை தான் பரிந்துரை செய்கின்றனர்.

அப்படி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை இன்றும் திருச்சி மலைகோட்டை வீதியில் நாம் காண முடியும். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இந்த வீதியில் 4 நான்கு தலைமுறைகளையும் கடந்து  மூலிகை இழைகள், கீரைகள் விற்பனை செய்யும் சித்ரா(50) என்ற பெண்மணியை சந்தித்த போது.

இங்குள்ள எல்லா மூலிகைகளும், இலைகளும், கீரைகளும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டது. அதில் தூதுவளை இழை நெஞ்சு சலிக்கும், முடக்கத்தான் கீரை இடுப்பு, கை, கால் வலிகளுக்கும், தலை பாரத்துக்கு நொச்சி இலை, தலைமுடிக்கு கரிசலாங்கண்ணி, வறட்டு இருவலுக்கு முள் முருங்கை, ஞாபக சக்திக்கு வல்லாரை, தலையில்  பேன், பொடுகு நீங்க குமுட்டி காய், மூலத்திற்க்கு தூத்தி கீரை, மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி,வெப்பாலை வண்டு கடிக்கு, கூலப்பூ கிட்னிக்கு, சொறி சிரங்கு குப்பை மேனி இலை, ஆடாதொட இலை, அம்மா பச்சரிசி இலை, நொனா இலை, சீம அத்தி இலை, என்று அடுக்கி கொண்டே போனார்.

இவருடைய பின்னனி குறித்து பேசிய போது சொந்த ஊர் குழுமணி கிராமம் இவருடைய அப்பா ராயரத்தினம் இந்த மூலிகைகளை கொண்டு அதிகளவில் வைத்தியம் பார்த்து வந்தவர். அன்றிலிருந்து இந்த இயற்கை மூலிகைகளை பார்த்து பார்த்து எனக்கும் தந்தையை போல பலருக்கும் இந்த இயற்கை மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.nature medicine

இதனால் தன்னுடைய அப்பா சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு சென்று இலை தலைகளை எடுத்து கொண்டு வருவார், கீரைகளை பல மைல் தூரம் நடந்து சென்று எடுத்து வருவார். அவர் இந்த இலைகளை நுகர்ந்து பார்த்து என்ன இலை என்பதை உறக்கத்தில் கூட கூறுவார். அந்த அளிவிற்க்கு முழு ஈடுபாட்டுடன் தன்னுடைய பணியை செய்த அவரிடம் தான் நான் இதை கற்று கொண்டேன்.

ஒரு காலகட்டத்தில் தந்தை இறந்த பின்னர் ஓரிரு ஆண்டுகள் மட்டும் வைத்தியம் பார்த்தேன். பின்னர் புதிய ஆங்கில மருந்துகள் வர துவங்கியதால் இயற்கையை மக்கள் மறக்க ஆரம்பித்தார்கள். ஓவ்வொரு மூலிகையையும் தேடி அலைந்து கண்டுபிடித்து எடுத்து வர குறைந்தது 3 நாட்கள் ஆகும். ஒருசில இடங்களில் இந்த மூலிகை இலைகள் தாராளமாக கிடைக்கும், ஒருசில மூலிகைகள் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் பொது மக்களுக்கு மட்டும் இந்த மூலிகைகளை கொடுக்கவில்லை.

எங்களிடம் பல நாட்டு வைத்தியர்கள், சித்த வைத்தியர்கள் தொடர்ந்து வாங்கி கொள்வார்கள். இவ்வளலு முக்கியதுவம் வாய்ந்த இந்த இயற்கை மருத்துவம் அழிந்து விடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

இதுபோன்ற இயற்கை மூலிகைகளுக்கும், கீரைகளுக்கும், இலைகளுக்கும் நாங்கள் போகாத இடமில்லை எல்லா இடங்களிலும் எங்களுடைய கால்கள் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமமும், காடு, மேடு என்று பாராமல் எவ்வளவு தூரமாக இருந்தாலும் அங்கு சென்று இது போன்ற மூலிகைகளை தேடி கண்டறிந்து அவற்றை எடுத்து வருவோம்.

இதற்க்கு பணம் எதுவும் கொடுத்த வாங்க மாட்டோம் இயற்கை நமக்கு கொடுத்தது. வாரத்தில் 3 நாட்கள் மூலிகைகளை சேமிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் அதனை விற்பனை செய்யவும் இந்தி மலைகோட்டை சாலையில் அமர்ந்துள்ளோம் என்று கூறினார். இந்த தேடுதல்களுக்கு காரணம் என்றாவது ஒரு நாள் இந்த இயற்கை மூலிகைகளை தேடி மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த மூலிகை இலைகள், கீரைகளை விற்பனை செய்து வருகிறோம்.

அந்த காலத்தில் ஒரு கட்டு இலைகள், கீரைகள் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் தற்போது ஒரு கட்டு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கின்றோம். அதற்க்கு காரணம் விலை வாசி உயர்ந்துவிட்டது, பல இடங்களுக்கு சென்று மூலிகைகள், இலைகளை சேகரிக்க செல்ல வேண்டிய செலவு எல்லாம் கணக்கு பார்த்தால் கணிசமான தொகை தான் லாபம் கிடைக்கும் இருந்தாலும் மனசுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஆனால் எனக்கு பின்னால் இந்த வியாபாரத்தை யார் செய்வது என்று தெரியவில்லை என்னுடைய வாரிசுகளும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இனி வரும் காலங்களில் இதெல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த இயற்கையை தேடி 3ஆம் தலைமுறையினர் வருவார்கள் காரணம் அவர்களிடம் பெரிய அளவிலான மாற்றங்களை காண முடிகிறது. என்னிடம் வாடிக்கையாளர்கள் பலர் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன மூலிகை வேண்டும், என்ன கீரை வேண்டும் என்று கூறுவார்கள்.

அதன்படி நானும் ஓரிரு நாட்களில் கொண்டு வந்து கொடுப்பேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர் மருத்துவர்கள் தான் அதுவும், எம்.டி. அளவில் படித்தவர்கள் எல்லாம் என்னிடம் மூலிகைகளை வாங்கி சென்று பயனடைந்து வருகின்றனர்.

இப்படி இயற்கையோடு ஒன்றி வாழும் சமுதாயம் தான் இனி வரும் காலங்களில் நோய் நொடிகள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழுவார்கள் என்று கூறி முடித்தார்.

Leave A Reply

Your email address will not be published.