திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு தங்கத்தினாலான அபயஹஸ்தம்

0 37
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவரும் வருகை தந்து நம்பெருமாளையும், தாயாரையும் வழிபட்டுச் செல்வதோடு கோயில் விழாக்களை கண்டுகளித்தும், கலைச்சிற்பங்களையும் ரசித்துச்செல்வர்.sri 2
காவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்திருக்க நடுவிருந்து உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு அருள்புரிந்துவரும் பள்ளிகொண்ட நம்பெருமாளின் அபயஹஸ்தத்தினை (கை), அழகுறச்செய்யும் வகையில் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட 1 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்கத்தினாலான ரூ.50 லட்சம் மதிப்பிலான அபயஹஸ்தம் செய்விக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னதாக, அந்த பக்தர் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் சுந்தர் பட்டாச்சார்யார் ஆகியோரிடத்தில் இதனை வழங்கினார். இனிவரும் நாட்களில் நம்பெருமாள் தங்கத்தினால் ஆன அபயஹஸ்தத்தினை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

Leave A Reply

Your email address will not be published.