திருச்சியில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்.

0 68

திருச்சியில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 12 மற்றும் 13 ம் தேதிகளில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

நாட்டுக்கோழிஇந்த பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக் கூண்டில் வளர்த்தல், முறையான பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 12ம் தேதி காலை 10மணிக்குள் வர வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431- 2331715 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.