திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடக்கம்

0 13
திருச்சி மாவட்ட கால்பந்து கூட்டமைப்பு மற்றும் எல்லோ ரோஸ் கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டிகளை அரசு தலைமைக்கொறடா ஆர்.மனோகரன் தொடங்கி வைத்தார்.

முதல் மற்றும் பிற்பாதி தலா 15 நிமிடங்கள் என 35 நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இப்போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்படும்.

திருச்சி மாவட்ட கல்லூரி  மற்றும் கால்பந்து சங்கத்திலிருந்து 29அணிகள் பங்கேற்றிருந்தன. முதல் போட்டியில், திருச்சி விளையாட்டு விடுதி அணியும், சாரநாதன் கல்லூரி அணியும் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் விளையாட்டு விடுதி அணி வெற்றிபெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் காஜாமலை அணியும், புதுக்கோட்டை அணியும் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் காஜாமலை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியினை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.