ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

0 4

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.தால்வி தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரையில் முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 2 முதல் 10 வரையிலும், கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கான முகாம் மதுரையில் நவம்பர் 11 முதல் 20 வரையில் முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து சென்னை புனித செயின்ட் கோட்டையில் எஸ்.என்.தால்வி வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி

தமிழகத்தில் ராணுவத்தில் இளைஞர்கள் சேருவது மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். இப்போது பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஜவானாகச் சேர்ந்தாலே மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும். இதர பிரிவு இடங்கள் எனில் ரூ.52 ஆயிரம் வரை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ராணுவப் பணியிடங்கள் 1,600-ம், தொழில்நுட்பப் பணியிடங்கள் 400-ம் காலியாக உள்ளன. இதற்காக த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் முகாம் நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோருக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்படும்.

உடல்தகுதித் தேர்வுகள் எப்படி? முதலில் உடல்தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். 1.6 கிலோமீட்டர் தூரத்தை 5.30 நிமிஷங்களில் ஓடிக் கடக்க வேண்டும். “ஃபுல் அஃப்ஸ்’ எனப்படும் முறையை 10 தடவை செய்ய வேண்டும். இதற்கு மொத்தமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். போதிய பயிற்சியை எடுக்காமல் ஓட்டத்தில் பங்கேற்பதால், சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, போதிய பயிற்சியை எடுத்த பிறகே முகாமில் பங்கேற்க வேண்டும்.

இடைத் தரகர்களை நம்பாதீர்: உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஹிந்தி, ஆங்கில மொழிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வை நடத்த பாதுகாப்புத் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு இதுவரை பதில் ஏதுமில்லை.

ராணுவத்தில் சேர்த்து விடுவதாக இடைத் தரகர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுகின்றன. இளைஞர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்தே தேர்வில் பங்கேற்க வேண்டும். இடைத்தரகர்கள் யாரையும் நம்பக் கூடாது என்றார் தால்வி.

இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, தமிழக அரசின் இணைய சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெனரல் தால்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது

முகாமில் பங்கேற்க ராணுவத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில், தமிழக இளைஞர்களுக்கு எந்தத் தடையும் இதுவரை ஏற்படவில்லை.

அவர்கள் எளிதாகப் பதிவு செய்து கொள்ள வசதியாக தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.