திருச்சியில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுமி

0 21

திருச்சியில் முட்டையின் மீது அரை மணி நேரம் அமர்ந்து தியானம் செய்து 6 வயது பெண் குழந்தை உலக சாதனை படைத்தார்yoga

திருச்சி மண்டல டிஐஜியாக இருப்பவர் அருண். இவரின் மனைவி யமுனா தேவி மும்பையில் சுங்கம் மற்றும் கலால்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு இயைனியா அருண் என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் இன்று 30 முட்டைகளின் மீது சுமார் அரை மணி நேரம் பத்மாசன நிலையில் அமர்ந்து தியானம் செய்து உலக சாதனை படைத்தார்.

இந்த சாதனையானது பதஞ்சலி வேர்ல்டு புக்ஸ் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த சாதனையை பதஞ்சலி முதன்மை நடுவர் அசோகன் கண்காணித்தார். சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ருத்ர சாந்தி யோகாலயம்  கிருஷ்ணகுமார் செய்திருந்தார். சாதனை படைத்திட்ட குழந்தை இயைனியா அருணை அனைவரும் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.