திருச்சி சமயபுரத்திற்க்கு வரும் பக்தர்கள் இனி அம்மன் படத்தை மட்டுமே வணங்க முடியும்!

0 19

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பாலாலய விழா முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மனின் திருஉருவ படத்தை மட்டுமே வணங்க முடியம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் அருள்மிகு திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருக்கோவிலின் ராஜகோபுரம், சுற்றுச்சுவர், மேற்கூரைகள் அமைக்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு பாலாலய விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

முதல்கால யாகசாலை பூஜைகள் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கணபதி ஹோமம், பூர்ணஹதி ஹோமம், தீபாராதணையுடன் முதல்கால யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது கால யாகசாலை பூஜைகள் நேற்று நடைபெற்றது. அதனையொட்டி இன்றுமுதல் அம்மனை பாலாலயம் செய்து அறைக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். எனவே கும்பாபிசேகம் முடியும்வரை திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அம்மனின் திருவுருப்படத்தை மட்டுமே வணங்கி செல்ல முடியும். எனவே நேற்று நடைபெற்ற பாலாலயம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.