தபால் அலுவலகங்கள் மூலமாக புனித கங்கை தீர்த்தம் விற்பனை

0 22

திருச்சி மத்திய மண்டலத்தில் முதன்முதலாக தபால் அலுவலகங்கள் மூலமாக புனித கங்கை தீர்த்தம் விற்பனை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அஞ்சலகங்களின் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் புனித கங்கை தீர்த்தத்தை பெற இந்திய அஞ்சல் துறை புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து இந்த புனித கங்கை தீர்த்தம் பெறப்படுகிறது.ganga copy

இந்த புதிய திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோரால் கடந்த 10ம் தேதி துவக்கப்பட்டது. ரிஷிகேஷில் இருந்து எடுக்கப்பட்ட கங்கை தீர்த்தம் 200 மிலி பாட்டில் ரூ.15க்கும், 500 மிலி ரூ.22க்கும் கிடைக்கும். காங்கோத்ரியில் இருந்து எடுக்கப்பட்ட கங்கை தீர்த்தம் 200மிலி பாட்டல் ரூ.25க்கும், 500மிலி ரூ.35க்கும் கிடைக்கும்.

இந்நிலையில் முதன் முதலாக திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மற்றும் தஞ்சை தலைமை அஞ்சலக அஞ்சல் அங்காடியில் இந்த புதிய திட்டம் துவக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், இ போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் www.epostoffice.gov.in பதிவு செய்து துரித தபால் சேவை மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே கங்கை தீர்த்தம் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய கங்கை தீர்த்த திட்டத்தை திருச்சி தலைமை அஞ்சலக அங்காடியில் திருச்சி முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் பெரோஸ் மொஹிதீன் முன்னிலையில் இந்திய தபால் துறை பயிற்சி அதிகாரி கணேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி புனிதகங்கை தீர்த்தத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.