15 கோடி மக்களின் வாழ்வை அழிக்க காத்திருக்கும் பூகம்பம் !

0 4

இந்த உலகம் மர்மம் நிறைந்தது என்பதற்க்கு மிகப்பெரிய சான்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அது இந்தியா, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. இதுக்குறித்து தட்பவெப்ப நிலை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களை மிரள வைக்க உள்ளதாக தெரிகிறது.

வங்கதேசத்தை மையமாக கொண்டு அதிகளவில் உயிரழப்புகளை ஏற்படுத்த கூடிய பூகம்பம் தயாராக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பூகம்பம் வங்கதேசம், கிழக்கு இந்தியா, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி படுகைகளில் ஏற்பட உள்ளதால் இந்த பூகம்பத்தை தாங்க கூடிய அளவிற்கான சக்தி இந்த பகுதியில் இல்லை என்று கூறுகின்றனர்.EQ_World_Map_screen

இந்த பகுதிகள் மிகவும் லேசான நிலப்பரப்பை கொண்டுள்ளது. தற்போது நடைபெற்ற ஆய்வில் நதி படுகைகளில் உள்ள மணல் அடுக்குகளில் டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 8.2 முதல் 9 ரிக்டர் அளிவலான பூகம்பம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். தற்போதைய ஆய்வுவின் படி இந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்க்கு அதிகமாக 9 ரிக்டருக்கும் மேலாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இந்திய பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு வடக்கு நோக்கு முடிட் மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மோதலே இமயமலை வளர்வதற்க்கு காரணமாகவும் இருந்ததாம் கடந்த ஆண்டு நேபாளத்தில் 9000ஆயிரத் உயிர்களை காவு வாங்கியதற்க்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பூகம்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய ஆபத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்றும். இந்தியா, வங்தேசம், மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கம் 15கோடி மக்களின் வாழ்வாதாரத்தை இது அழிக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.