யார் பத்திரிக்கை காரன் ?

0 24

பிரபல பத்திரிக்கை நிருபர்கள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஏராளமான புற்றிசல் நிருபர்கள்.

தமிழகத்தில் புற்றீசல்கள் போல நிருபர்கள் பணிக்கு ஏராளமானோர் வந்துவிட்டனர். தினமும் வெளிவரக்கூடிய பிரபல பத்திரிகைகளின் நிருபர்கள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஏராளமானவர்கள் வந்துவிட்டதால் அந்த பணிக்குரிய மரியாதையே போய்விட்டது என கூறலாம். அதற்கு காரணம் கவருக்காக குறைந்தது 40க்கும் மேற்பட்ட நிருபர்கள் வந்துவிட்டனர். அதிகபட்சம் 70 பேர் உள்ளனர்.

சென்னையில் இருந்து வெளிவரக்கூடிய பத்திரிகைகள், வாரம் ஒருமுறை, வாரம் இருமுறை வரக்கூடிய பத்திரிகைகள் அதிகளவில் வந்துவிட்டன. இந்த பத்திரிகைகளுக்கு நிருபர்கள் என்ற போர்வையில் தினமும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஏதாவது பணம் கிடைக்குமா? என்ற கூட்டம் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் சென்று சேகரிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எதுவும் பத்திரிக்கையில் வருவதில்லை.

இவர்களை தவிர டுபாக்கூர் டி.வி. நிருபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இப்படி இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், நிகழ்ச்சி நடத்துபவர்கள் செய்வதறியாமல் திகைத்து கொண்டு செய்திகள் வந்தாலும், வராவிட்டாலும் வருகிறவர்களின் தலைக்கு 100 ரூபாய் என்று கையூட்டு தந்துவிடுகிறார்கள்.

முக்கிய நிருபர்களுக்கு பெரிய கவரும், சின்ன சின்ன பத்திரிகைகளின் நிருபர்களுக்கு சிறிய தொகையும் தந்துவிட்டு சென்று விடுகிறார்கள். ரூபாய் 1000 தந்தால் அதை பிரிக்கும்போது ஒருவருக்கு 65 ரூபாய் கிடைக்கிறது. இது கேவலமான சம்பவமாக இருந்தாலும் உண்மையான பத்திரிகையாளர்கள் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

வேறுவழியில்லாமல் பெரிய பத்திரிகை அலுவலகத்தில் வரும் உத்தரவை ஏற்று, நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது, பத்திரிகையாளர்கள் அதிக அளவில் வருவது ஏற்று கொள்ள கூடிய விசயம் என்றாலும், கவருக்காக இந்த பனியன் கம்பெனியில் கட்டிங் மாஷ்டராகவும், ஹோட்டலில் சர்வராகவும், சமையல் வேலை பார்ப்பவரும், இந்த தொழிலுக்கு வருவது என்பது வாடிக்கையாகி விட்டது.

இது கோவை, திருப்பூர், மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிருபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட நிருபர்களை வைத்து ஆளுங்கட்சி ஆதரவு பத்திரிகை நிருபர்களும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

திருப்பூரை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி டி.வி. நிருபர் ஒருவர் தான் சொன்னால்தான் அமைச்சர் முதல் அ.தி.மு.க., பிரமுகர்கள் வரை கவர் தருவார்கள் என பீலா விட்டு, மளிகை லிஸ்ட் அளவிற்கு பெயரை கொடுத்து கவரை பெற்று கொண்ட நிருபர், அவர் தருவதை தான் மற்ற நிருபர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது.

குறைவாக கொடுத்ததாக புகார் தெரிவித்தாலும் எந்த பிரமுகர்களும் அதை காதில் வாங்கி கொள்வதில்லை. அவரின் பித்தலாட்டத்திற்கு ஒரு சில பத்திரிகையாளர்கள் ஆதரவு தருவதில்லை. இப்படி நிருபர்களுக்கு தரும் பணத்தை வைத்து அதிக அளவில் அந்த ஆளும்கட்சி டி.வி. நிருபர் சம்பாதித்துவிட்டதாக புகார்கள் வருகின்றன.

அதேபோல் முக்கிய பத்திரிக்கை நிருபர்களும் சம்பவ இடத்திற்கு வராமலே ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு சென்றுவிடுகிறது. இதையெல்லாம் தாண்டி தான் சின்ன சின்ன பத்திரிகையாளர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ரூ.100க்காக காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இவர்கள் சாரை சாரையாக வருவதால் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் அஞ்சி நடுங்குகின்றனர். நிருபர்களை கட்டுப்படுத்த எந்த பிரமுகர்களும் முன் வருவதில்லை. மாநகரில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் ஒருவரே நிருபர்களை பிரித்து பார்த்து கவர் தருகிறார், இது வேதனையான விசயம். அவரது வாயாலேயே ஒரிஜினல் நிருபர்கள் என்றும் டூப்ஸ் நிருபர்கள் என்று கூறுகிறார். சின்ன சின்ன பத்திரிகையாளர்களை வைத்து கொண்டு பெரிய பத்திரிகையாளர்கள் பணம் சம்பாதிப்பது வெளியுலகத்திற்கு தெரிவதில்லை.

ஆனால் பெரிய பத்திரிகையாளர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் சின்ன பத்திரிக்கையாளர்கள் நிலை அதே கதிதான்.

ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் பத்திரிகையாளர்களை அழைத்து செல்லும் பெரிய பேனர் வைத்துள்ள 3 தொலைக்காட்சி நிருபர்கள் வந்த சின்ன பத்திரிகை நிருபர்களை காட்டி எங்கள் பின்னால் பெரும் கூட்டமே உள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கூறி ஒரு பெரிய தொகையை வாங்கிவிட்டு, உடன் வந்தவர்களுக்கு பெயர் அளவுக்கு 100 அல்லது 200 ரூபாயை கொடுத்துவிட்டு மீதம் உள்ள பெரிய தொகையை ஒரு சில 4 பேர் மட்டுமே பங்கு பிரித்துக்கொள்வர் அது எப்படி என்றால் தங்களுக்கு போக மீதம் உள்ள  அதாவது சிறிய பத்திரிகையாளர்களிடம்
மீட்டர் விட்ட பணத்தில் விலை உயர்வான பிராந்தி பாட்டில், அதில் கலக்க கூல்ட்ரிங்க்ஸ், சைடீஷ் என பங்கு பிரித்து கொள்வர்.

இதில் ஒரு ஆளுங்கட்சி ஆதரவு பத்திரிகையின் கூரியர் பாயாக இருந்த நபருக்கும் அதிருப்தி வரவே, தற்போது அவர் எங்கு பிரஸ் மீட்டிங்கில் தண்ணீ பார்ட்டி நடக்கிறதோ அங்கு போய் தனது தாக்கத்தை தீர்த்துக்கொள்வார். இப்படித்தான் திருப்பூர் நிலை உள்ளது.

முக்கிய பத்திரிக்கையில் உள்ளவர் ஒருவர் சங்கம் என்ற பெயரில் எப்படி எல்லாம் அதிகாரியை மிரட்டி பணம் பறிக்கிறார் என்பது உள்பட பல உண்மை சம்பவங்கள் அடுத்த வாரம் பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.