திருச்சியில் இன்று தொடங்கிய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி

0 12

தேசிய அளவில் மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது5

அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய அணியும், குஜராத் மின்சார வாரிய அணியும் மோதின.4

இதில் 33க்கு 4 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதே போல மற்றொரு போட்டியில் டெல்லி அணியும், இமாச்சல பிரதேச அணியும் மோதின. போட்டியானது வருகின்ற 17ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. 16ம் தேதி அரையிறுதி போட்டிகளும், 17ம் தேதி மாலை இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.2

வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் பாண்டி, மின் பகிர்மான கழக செயலாளர் பாலாஜி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் வளர்மதி உள்ளிட்ட மின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.