ஆபாசத்தை மிஞ்சிய ஆண்ட்ராய்டு கேம் : கூகுள் அதிர்ச்சி.!!

0 3

கூகுள் தேடலில் எப்பவும் முன்னிலையில் இருப்பது ஆபாசம் சேர்ந்த தேடல்கள் மட்டுமே. உலகளவில் ஆபாசத்தை மிஞ்சும் தேடல்கள் மிகவும் அரிதான விடயமாம். இந்நிலையில் உலகின் பிரபல தேடுபொறியான கூகுளையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது சமீபத்திய கூகுள் தேடல்.poki

முன்னதாக ஆபாச தேடல்களையும் கடந்து பிரெக்ஸிட் தேடல் அதிகரித்ததாகத் தனியார் நிறுவனத்தின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் குறித்த தேடல் சமீபத்தில் அதிகரித்து ஆபாசம் சார்ந்த தேடல்களைப் பின்னுக்கு தள்ளியது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெக்ஸிட் சார்ந்த தேடல்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடலில் ஆபாசம் சார்ந்த தேடல்களை மிஞ்சும் தேடல்கள் மிகவும் அரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் பிரெக்ஸிட் தேடல்களை தொடர்ந்து இம்முறை ஆண்ட்ராய்டு கேம் சார்ந்த தேடல் கணிசமான அளவு அதிகரித்திருக்கின்றது.

கடந்த வாரம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு கேம் தான் போக்கிமான் கோ. உலகெங்கும் சமூக வலைதளஙகளில் ட்ரென்ட் ஆன இந்த கேம் தற்சமயம் கூகுளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆனதைத் தொடர்ந்து போக்கிமான் கோ சார்ந்த கூகுள் தேடல்களும் அதிகரித்தது. ஆபாசம் சார்ந்த தேடல்களை விட போக்கிமான் கோ சார்ந்த தேடல்கள் அதிகரித்திருக்கின்றது.

ஆபாச தேடல்களை விட அதிக தேடப்பட்ட முதல் ஆண்ட்ராய்டு கேம் போக்கிமான் கோ என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளியான சில தினங்களில் அதிகளவு தேடல்கள் இல்லை என்றாலும், சில கடந்த வார இறுதியில் இது குறித்த தேடல் அதிவேகமாக எகிறியதாகக் கூறப்பட்டுள்ளது.

கூகுள் தேடலில் குறிப்பிடத்தக்க வகையில் நெதர்லாந்து, கோஸ்டா ரிக்கா, கனடா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் போக்கிமான் கோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தினசரி பயனர்களின் எண்ணிக்கையில், டின்டர் பிரபல டேட்டிங் செயலியை பின்தள்ளியதோடு, ட்விட்டர் தளத்தின் பயனர்களை விடச் சற்றே குறைவாக இருக்கின்றது.

தற்சமயம் வரை அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு கருவிகளில் சுமார் 5.16% கருவிகளில் போக்கிமான் கோ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொருத்த வரை டின்டர் செயலியை பயன்படுத்துபவர்களை விட போக்கிமான் கோ அதிகப்படியான ஆண்ட்ராய்டு கருவிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்கிமான் கோ ஆப் இன்ஸ்டால் செய்திருப்பவர்களில் சுமார் 60% பேர் தினமும் இந்த கேமினை விளையாடுவதாகத் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.