ஸ்வாதி மரணத்தில் சந்தேகங்களை கிளப்பும் ராம்குமார் பேஸ்புக் வீடியோ போலிசார் அதிர்ச்சி !

0 18

 

சுவாதி போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எங்கே?

சுவாதியின் மொபைல பத்தி போலிசார் பேசாததின் காரணம் என்ன?

சுவாதியின் அப்பா வீட்டில் இருந்து வண்டியில் அழைத்து செல்கின்ற காட்சி காலை 6:35க்கு cctv கேமராவில் பதிவாகி உள்ளது.

ராம் குமார் கொலை செய்துவிட்டு வெளியே தப்பித்து ஓடி வரும்போது (காவல்துறையினர் கூறியவை) ஒரு வீட்டில் உள்ள cctv கேமராவில் பதிவாகி உள்ள நேரம் 6:32.

சுவாதியின் வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை 18 கேமாராவில் 5 இடத்தில் ஒருவன் பைக் பின் தொடர்கிறான். அவன் யார்?

6.51 வரை சுவாதி அவருடைய அப்பாவுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. ஆனால் 6.32 க்கே ராம்குமார் எப்படி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய காட்சி என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது?

அதேப்போல் ராம்குமார்தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்க சுவாதியின் அப்பாவை எதற்கு வரவழிக்க வேண்டும்? சுவாதியின் அப்பா மகளை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு அப்படியே சென்றவர் தானே? அவர் எப்படி ராம்குமாரை பார்த்திருக்க முடியும்?

சுவாதியின் குடும்பம் பெங்களூரில் இருந்திருக்கிறது. அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் சுவாதி ஆட்டோவில் தான் வேலைக்கு சென்றிருக்கிறார். அப்படி செல்லும் போது அடிக்கடி போனில் கோபமாக பேசியதாக ஆட்டோ ஓட்டுன ர் கூறுகிறார்.

“என் லாப்டாப்பையும் பிண்டரையும் கொடுத்து விட்டேன். பிறகு ஏன் தொல்லைபடுத்துகிறீர்கள்” என்று சுவாதி கூறியதாக கூறுகிறார்.

அந்த லாப்டாப்பும் பிண்டரும் எங்கே? சுவாதியை அறைந்தவன் யார்? சுவாதியின் செல்போன் என்னாயிற்று? பெங்களூரில் சுவாதி குடும்பத்தினருக்கு என்ன பிரச்சனை இருந்தது?

இதுப்போன்ற அதிமுக்கிய விசாரணையை செய்யாமல் காவல்துறை ராம்குமார் குடும்பத்தினரிடம் மட்டும் மல்லுகட்ட வேண்டிய தேவை யாரை காப்பாற்றுவதற்காக?

6.50 க்கு மேல் கொல்லப்பட்ட ஒரு பெண்ணை 6.32 இல் கொன்று விட்டு ஓடினான் என்று காவல்துறை டகால்டி வேலை பார்ப்பது எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக? இப்படி சுவாதி கொலையில் சந்தேகங்களை கிளப்பும் வீடியோ கொலை குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் முகநூலில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

Leave A Reply

Your email address will not be published.