கபாலி ஜுரம் கூகுளில்  அதிகம் தேடப்படும் புத்தகம்

0 10

My Father Baliah_kabaliநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.   இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதும் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் ரஜினி ரசிகர்களே, தியேட்டரை முற்றுகையிட்டது பேனரை கிழித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் படத்தின் 2 நிமிட காட்சிகள் சமூகவலைதளம் மற்றும் வாட்ஸ் அப்பில் நேற்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கூடவே ஒரு இணையதளம் 1.50 மணிநேர திரைப்படத்தின் மொத்த காட்சியையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதில் ரஜினி மலேசிய சிறையில் இருக்கும்பொழுது “My Father Baliah” என்னும் புத்தகத்தைப் படிப்பது போலவும், பின் சிறையிலிருந்து வெளியே வரும்பொழுது, அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை இன்னொரு நபர் சொல்வது போலவும் உள்ள காட்சி வாட்ஸ் அப்பில் தீயாய் பரவி வருகிறது.

இந்த காட்சியில் எவ்வித ரசிகர்களின் சத்தமும் இல்லை, யாருக்கோ திரையிடப்பட்ட ப்ரிவியூ காட்சி தான் என்று கூறப்படுகிறது. இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் இந்த வீடியோ தொடர்ச்சியாக பகிரப்பட்டும், அந்த குறிப்பிட்ட காட்சியில் வரும் புத்தகமான “My Father Baliah” என்னும் புத்தகம் தொடர்ச்சியாக இணையத்தில் தேடப்பட்டும், அது குறித்து விவாதிக்கப்பட்டும் வருகிறது. மொத்தத்தில் கபாலி பல விமர்சனங்களை குவித்தாலும்   அந்த புத்தகத்தை  நெட்டிசன்ஸ் நோட் செய்து, கூகுளில் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.