வி.ஏ.ஓ.: ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

0 4

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

 இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.

 இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவு அஞ்சல், குறுஞ்செய்தி-மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள  தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.