அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்!

0 5

அணுவிஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்ட அப்துல் கலாம் நாட்டின் ஜனாதி பதி பதவியையும் அலங் கரித்து ஒட்டு மொத்த மக்களின் அன்பையும் அள்ளிச் சென்றவர்.எந்த கட்சியையும் சாராத, ஆனால் எந்த கட்சியாலும் நிராகரிக்க முடியாத வேட் பாளராக தேர்தலை சந்தித்து வென்றவர்.

2-வது முறையாகவும் அவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் பின்வாங்கியது தெரியும். ஆனால் அவர் போட்டியிட விரும்பினார் என்பது அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

அப்துல்கலாமின் உதவியா ளர் ஸ்ரீஜன்பால்சிங் எழுதி இருக்கும் புத்தகத் தில் அவர் எழுதிய கடித விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளது. அப்போது அவர் எழுதிய முதல் கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

எனதருமை இந்திய மக்களே! உங்களோடு இணைந்து இந்த தேர்தலை சந்திப்பது என நான் முடிவு செய்து இருக்கிறேன். பாராளு மன்றம் மற்றும் சட்டமன்றங் களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் அதரவு போதிய அளவில் இல்லை என்பது எனக்கு   தெரியும். எனக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்தே நான் தேர்த லில் போட்டியிட போகி றேன்.

நான் தோற்றுப் போவேன் என்று தெரிந்திருந்தாலும் போட்டியில் பங்கேற்க போகிறேன். ஏனெனில் மக்களின் இதயங்களில் நான் ஏற்கனவே இடம் பிடித்து விட்டேன். அவர்களுடைய ஆவலுக்காக இந்த தேர்தலில் போட்டியிடுவது எனது கடமை.

நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவன். யாருடைய அரசியல் கொள் கையையும் நான் ஆதரித்த தும் இல்லை. எதிர்த்ததும் இல்லை. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னை அனைவரும் ஆசிரியராக பார்க்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

தற்போது நான் தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளதால் ஒரு வேட்பாளராக மாறியிருக்கிறேன். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியாக வேண்டும். ஆனால் எனக்கென்று ஒரு கட்சியோ, தொண்டர் படையோ இல்லாத சூழலில் எனக்காக பொது மக்களாகிய நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தலில் நான் தோற் றாலும், வெற்றி பெற்றாலும் என் மீது அன்பு செலுத்து வதை நீங்கள் தொடரு வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு உண்மையானவராகவும், விசுவாசம் உள்ளவராகவும், பாசம் உள்ளவராகவும் இருப்பேன். இது தேர்தலுக்கான அரசியல் தந்திரமோ, பிரசார மந்திரமோ அல்ல. எனது இதயத்தில் இருந்து வெளிப் படும் சில வார்த்தைகள் இவை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் போட்டியில் இருந்து பின்வாங்கியது பற்றியும் 2-வதாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி பதவிக்கான போட்டி எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். மீண்டும் ஒரு முறை குடியரசு தலைவராக வேண்டும் என்று நான் விரும்பாத நிலையிலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சிலர் என்னை வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றனர். ஏராளமான பொதுமக்களும் தெரிவித்துள்ளார்கள். என் மீது அவர்கள் கொண்ட அன்பையே இது வெளிப்படுத்துகிறது.

எனக்கான ஆதரவை பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் எனது நன்றியை கூறிக் கொள்கி றேன்.

அதே வேளையும் யதார்த்த சூழலை ஆராயும் போது தேர்தலில் போட்டி யிடுவதில்லை என நான் முடிவு செய்து இருக்கிறேன். மக்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.