86 வயதான யானை கின்னசில் இடம் பிடிக்கிறது

0 6

கேரளாவில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் தாட்சாயிணி என்ற யானை, திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது.

86 வயதான அந்த யானை தற்போது பூஜாப்புரத்தில் உள்ள செங்கல்லூர் கோவிலில் உள்ளது.

கேரளாவின் மிகப்பழமையான இந்த யானைதான், உலகிலேயே பழமையானது. இதன்மூலம் மிக அதிக வயதான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் யானை என்ற பெயரை தாட்சாயிணி யானை பெறுகிறது.

ஏற்கனவே 85 வயதான தைவான் யானை உலகிலேயே வயதான யானை என்ற பெயரை பெற்றிருந்தது. ஆனால் இந்த யானை 2003–ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டது.

எனவே இப்போது தாட்சாயிணி யானையை உலகின் வயதான யானை என்று அங்கீகரித்து சான்றளிக்குமாறு கின்னஸ் சாதனை ஏடு நிறுவனத்துக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் கடிதம் எழுதி உள்ளது.

இதையொட்டி திருவனந்தபுரத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிற விழாவில் தாட்சாயிணி யானை கவுரவிக்கப்படுகிறது. அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.