இளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்

0 21

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் எளிதில் தொடர்புகொள்ளவும், இணையதளத்தைப் பயன்படுத்தவும், சிறப்புச் சலுகைகளுடன் இந்தத் திட்டம் உள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் இணையத்தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இளைஞர்கள், பணியில் உள்ளோர் உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையில் வரவேற்பு பெற்றுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் வட்டாரங்கள் கூறியது: கலந்தாய்வு மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட மாணவர்கள் சிறப்புத் திட்டம் (ரூ.118) மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில், 30 நாள் காலக்கெடுவுடன் கூடிய 1 ஜிபி டேடா வசதி, பிஎஸ்என்எல் அழைப்பிலிருந்து பிஎஸ்என்எல் அழைப்புக்கு 10 பைசா, ஓரு ஆண்டு காலக்கெடு, குறுஞ்செய்திக்கு 15 பைசா என பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது 1,700 மாணவர்களுக்கு மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

அத்துடன் இளைஞர்கள், பணிபுரிவோர் ஆகியோரும் இதில் இணைய ஆர்வம் காட்டியுள்ளதன் பேரில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.