திட்டம் போட்டு திருடற கூட்ட’த்தில் மெம்பர் ஆன பார்த்திபன்

0 8

அறிமுக இயக்குநர் சுதா இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா மற்றும் பார்த்திபன் நடிக்கும் படத்திற்கு திட்டம் போட்டு திருடற கூட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கும் பார்த்திபன், சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் பார்த்திபன்.parthipan

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

அப்படத்திற்கு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘கயல்’ சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சாத்னா நாயகியாக நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ‘டூ மூவி பஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்து வருகிறது.

இசை

வில் அம்பு படத்தில் பணியாற்றிய ஜோ மார்ட்டின் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நளனும், நந்தினியும் படத்திற்கு இசையமைத்த அஷ்வத் இசையமைக்க, மிருதன் படத்தொகுப்பாளர் வெங்கட் எடிட்டிங் செய்கிறார்.parthipan2

பார்த்திபனின் திறமை

இந்நிலையில் பார்த்திபன் குறித்து டூ மூவி பஃஃப்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். ரகுநாதன் கூறுகையில், ‘எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபனுக்கு தான் உண்டு.

சரியான நபர்

இந்த கதாப்பாத்திரத்தை பற்றி இயக்குனர் சுதர் என்னிடம் விவரிக்கும் போதே, பார்த்திபன் தான் இதற்கு சரியான நபர் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதேபோல் அவருக்கும் இந்த கதாப்பாத்திரம் ரொம்பவே பிடித்து போய்விட்டது. அவ்வளவு ஏன்..இந்த கதாப்பாத்திரத்திக்கான கெட்டப்பை உருவாக்கியதே பார்த்திபன் தான்.

Leave A Reply

Your email address will not be published.